திமுக உட்கட்சி தேர்தல்கள் முடிந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றுவருகின்றது. திமுகவின் மிகவும் வலிமையான அமைப்பாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் எப்போதும் பலராலும் கூர்ந்து கவனிக்கப்படும்.

மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி செயலாளர்களில் ஒருவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தளபதியாக பொறுப்பேற்று தொடங்கிய அமைப்பு இளைஞரணிஅமைப்பு திமுகவின் தளபதிகளாக இளைஞரணி நிர்வாகிகள் தான் 80 களில் கட்சிப்பணியாற்றினார்கள் அதனால் இளைஞரணி பொறுப்பு என்பது அந்த கட்சியின் மிகவும் உயரிய பொறுப்பின் அடையாளமாக கருதப்படும்.
இன்றைய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் முதன்முதலில் இளைஞரணி பொறுப்பேற்று பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பின்னர் துணை முதலமைச்சரகவும் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர இளைஞர் அணி பொறுப்புக்கு மாதேஷ்வரன், ஐயப்பன், அரவிந்த், கலிபுல்லா,ரமணன், திவாகர் உள்ளிட்டோர் இளைஞரணி நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ளனர்.




