சமீபகாலமாக அஜித்தே கடவுளே என்று தியேட்டரில் விஜய் மாநாட்டில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் என்றில்லாமல் வெளிநாடுகளிலும் அஜித்தே கடவுளே என்று கூச்சல் போடும் சம்பவங்கள் சொல்லிவைத்ததுபோல தொடர்ந்து நடக்கிறது.எதார்த்தமாகவோ அல்லது ஆர்வமிகுதியிலோ நடக்குமாயின் இது அஜித் பட வெளியீட்டின்போதோ, அவரது பிறந்தநாளின் போதோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் படம் குறித்த தகவல்கள் வரும்போதோ வந்தால் அது இயல்பாக இருக்கும் ஆனால் மற்றவர்களின் மாநாடு, பொது நிகழ்ச்சி போன்ற இடங்களில் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை ஆராய்ந்தால் இதன் பின்னணி முழுவதும் இயக்கம் தான் என்று அஜித் தரப்பிலிருந்தே ஒருவித நகைப்புடன் சொல்கிறார்கள். தொடர்ந்து அஜித் படங்களின் தோல்வியும் சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோ வட்டத்தில் விஜயை பின்தள்ளி ரஜினிக்கு அடுத்து என்கிற இடத்தில் நுழைந்ததும் மார்க்கெட் போனதை மறைக்க விஜய் அரசியலுக்கு தந்திரமாக தாவியதைபோல எதையும் செய்ய முடியாமல் தவிக்கும் அஜித் தன்னை தக்கவைத்துக்கொள்ள வேறு வழியில்லாமல் அஜித்தே கடவுளே என்று அவரது உதவியாளர் மூலம் தூண்டிவிடச்சொல்லி இதை செய்வதாகவே அவரது தரப்பே சொல்கிறது.அஜித்ன் நண்பர் மறைந்த எஸ் எஸ் சரவர்த்திக்கும் அஜித்க்கும் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் அஜித்தை முழுவதும் அறிந்தவர் தற்போதும் முன்னணி நடிகரிடம் பணியாற்றும் ஒரு மூத்த தயாரிப்பு நிர்வாகி நம்மிடம் அஜித் தனது சினிமாவின் தொடக்க காலத்திலேயே பி ஆர் ஓ சுந்தர் என்பவர்மூலம் இப்போது விஜய் செய்யும் பி ஆர் வேலைகளை தீவிரமாக செய்தவர் என்றும் தொடர்ந்து ரஜினிக்கு இணையாக ஒப்பனிங் என்கிற செய்தியை பரப்பவைத்தார். ஆனால் இதுவரை ஆதாரபூர்வமாக ஒரே ஒரு படமும் அப்படி ஒப்பனிங் இருந்ததாக சொல்லவே முடியாது. இப்படி சொல்லி பேசி தொடர்ந்து தனது பார்ப்பன சமூக செய்தியாளர்களால் 20 வருடங்களுக்குமேலாக எழுதவைத்து எழுதவைத்து குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்தார். அது அவரது மாக்கெட்டிங் யுக்தி ஆனாலும் அவரின் இலக்கான ரஜினிக்கு அடுத்த என்கிற இடத்தை பிடிக்கவேமுடியவில்லை என்பதே அதிகாரபூர்வ உன்மை. இப்படி இவர் தனது சமூக ஆட்களால் மறைமுகமாக செய்துவந்த வேலையை தான் இப்போது விஜய் வேறுவகையில் பின்பற்றுவதாக சினிமா வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.
மேலும் தனதுபடங்களின் வெற்றி மூலமாகவோ தொடர் செயல்பாடுகளாலோ ரசிகர்கள் பலத்தை அவர் பெற்றதில்லை என்பதையும் சற்று ஆராய்ந்தால் உணரலாம்.மாறாக 25 வருடங்களாக தானாக சினிமாவில் வந்தார் வென்றார் எந்த பின்னணியும் இல்லாமல் வந்தார் தொடர் அறுவை சிகிச்சை செய்தவர், தன்னம்பிக்கை மிக்கவர் என்கிற மிகைப்படுத்தசெய்திகள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக திட்டமிட்டு வந்துகொண்டே இருக்கும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் என்கிற செய்திகளின் தாக்கத்தாலும் தான் இந்த ரசிகர்களும் உருவாக்கப்பட்டனர்.நிச்சயம் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ரசிகர்கள் தான் அஜித்க்கு 90% என்று அடித்து சொன்னார்.இவரைவிட தன்னம்பிக்கையாக எந்த பின்னணியும் இல்லாமல் உச்சத்துக்கு வந்த விக்ரம், சிவார்த்திகேயன் போன்றவர்களின் வெற்றி குறித்து இப்படி எந்த செய்திகளும் ஏன் என்று கேள்வி எழுப்பியவர் அதற்கு அஜித்ன் சமூக பின்னணியும் பொருளாதார பின்னணியும் தான் மிக முக்கிய காரணம் என்பதை தெரிவித்தார். அதே மாடலைத்தான் இப்போது வேறுவடிவில் எடுத்துள்ளார் அஜித் என்றவர்.தனது மாக்கெட் ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், விஜய், வரிசையில் 5 வது இடத்துக்கு வந்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பதை போல இருந்தாலும் தனது அரசியல் இலக்கு கனவை சரியாக தட்டி தூக்கி விஜய் பறித்து சென்றதாலும்(இதற்க்கு மிகப்பெரிய ஆதாரத்தையும் வைத்துள்ளார் )இருக்கின்ற ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ளவும் வெகுஜன மக்கள் மத்தியில் மீண்டும் அஜித் என்கிற பெயரை நிலை நிறுத்தவும் 80களில் ரஜினி ரசிகர்கள் ஊடக பிரதிபலன் பாராமல் கடவுளே ரஜினியே என்று உணர்வுபூர்வமாக செய்ததை தனது வளர்ச்சிக்காக தனது மறைமுக பி ஆர் டீம் மூலம் அஜித் பயன்படுத்துவது நிச்சயம் ஒருநாள் அம்பலமாகும் என்றும் தெரிவித்தார்.
- சவுத் இந்தியன் வாய்ஸ்க்காக லண்டனில் இருந்து பார்த்திபன்




