Sunday, April 19, 2026
Homeக்ரைம்சாப்பாட்டிற்காக மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவர் கைது

சாப்பாட்டிற்காக மனைவியை அடித்து கொலை செய்த கொடூர கணவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ரோஜா தோட்டம் பகுதியில், பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து வரும் கணேசன் என்பவர் சாப்பாட்டிற்காக மனைவியை அடித்து கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணேசன் – அமுதா தம்பதிக்கு இடையே சமீப நாட்களாக பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன் மனைவி அமுதாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது அவர் அமைதியாக இருந்த நிலையில், ஆத்திரமடைந்த கணேசன் அருகிலிருந்த டேபிள் பேனை எடுத்துத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தநிலையில் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கணேசனை செய்து செய்து விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments