Friday, April 17, 2026
Homeதலையங்கம்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைப்பு - தமிமுன் அன்சாரி வரவேற்பு

மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைப்பு – தமிமுன் அன்சாரி வரவேற்பு

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே, பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பதிவு

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில், “மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு மூன்று மாதங்களுக்கான தொகையை இம்மாதமே ஒரே தவணையாகவும், அவர்கள் கூடுதல் பலன்பெறும் வகையில் கோடைக்கால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாயையும், இன்று அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற திராவிட மாடல் அரசின் முதல்வர் தளபதி ஸ்டாலின் அறிவிப்பை மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கிறது.

https://x.com/ThamimunansariM/status/2022184911239847991

இது வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்படும் பஞ்சாமிர்தம் ஆகும். இன்பங்கள் நிறைந்த அறிவிப்பு. இதயங்கள் குளிரும் பரிசளிப்பு. முதலமைச்சருக்கும்  பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments