சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி புகழ் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்திருக்கும் “வித் லவ்” திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

வசூல் வேட்டை

விமர்சன ரீதியில் மட்டுமல்லாமல் வசூலிலும் இத்திரைப்படம் மிகப் பெரிய சாதனையை படைத்து வருகிறது. கடந்த வாரம் வெளியான திரைப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் எப்போதெல்லாம் நல்ல திரைப்படங்கள் வெளியாகிறதோ அந்த திரைப்படத்தை பார்த்து அந்த படக்குழுவினரை மனதார பாராட்டக்கூடியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தன்னுடைய மகளின் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று பட குழுவினரை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

“வித் லவ்” பட குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here