மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்த திமுக எம்.பி. மருத்துவர் கனிமொழி சோமு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வியடைந்த நிதிநிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய தனி தைரியம் வேண்டும் என்று நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிதிநிலை அறிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். வேலைவாய்ப்பு , விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத நிதிநிலை அறிக்கைகளே கடந்த ஆண்டுகளில் வந்துள்ளதாக அவர் கூறினார். வளர்ச்சி என்ற பெயரில் சில பெரிய திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்படுகின்றன; ஆனால் அதனால் பொதுமக்களுக்கு நேரடியாக பலன் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சமூகநீதியும், மாநிலங்களின் உரிமைகளும் கண்டுகொள்ளப்படாத நிதிநிலை அறிக்கை என்றும், மத்திய அரசு தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்து மக்களுக்குப் பயன் அளிக்கும் நிதிநிலை அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கனிமொழி சோமு வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here