தமிழ்நாட்டு அரசியலில் அமைதியான, ஆனால் தவிர்க்கவே முடியாத அரசியல் ஆளுமைதான் ஓ. பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வராக பொறுப்பு வகித்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முகமாக இருந்தவர். அவரது அரசியல் பயணத்தில் சிலசமயங்களில் பொறுமையாக அமைதியாக இருந்தாலும், அவரது தனித்துவம், ஜெயலலிதா மீது அவர் காட்டிய விசுவாசம், தொண்டர்களை அரவணைக்கும் அமைதியான பண்பும் அவரது தனிச்சிறப்புகளுள் ஒன்று தற்போதைய அவரது அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை மறுக்க முடியாது.ஜெயலலிதா பதவியிலிருந்து விலகிய சந்தர்ப்பங்களில், கட்சிக்காகவும் ஜெயலலிதா அவர் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் பதவியேற்றவர் ஓபிஎஸ். மீண்டும் ஜெயலலிதாவுக்கு அவர் காட்டிய விசுவாசத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் பிளவுகள் – சசிகலா அணியின் எழுச்சி, பின்னர் ஈ.பி.எஸ் தலைமையின் வலிமை – இவையெல்லாம் ஓபிஎஸ்-ஐ தடுமாறவைத்தது உண்மை என்றாலும் ஆனால் “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பதுபோல், கடந்த மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமலே, ராமநாதபுரம் தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, தனது தனிப்பட்ட செல்வாக்கை மீண்டும் நிரூபித்தார்.—பாஜக கூட்டணியிலிருந்து விலகல் – புதிய அரசியல் கணக்கீடுதற்போதைய சூழலில், பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியிருப்பது முக்கிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது சாதாரண தீர்மானம் அல்ல. பாஜக தன்னுடைய ஆதரவை குறிப்பாக தென் மாவட்டங்களில் பலப்படுத்த முயற்சிக்கும் நிலையில், ஓபிஎஸ் வெளியேறுவது அவர்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ன் வலிமை!மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு உள்ள ஆதரவு இன்றும் குறையவில்லை. இந்த பகுதிகளில் அதிமுகவும், பாஜகவும் தனியாகவும் – கூட்டணியாகவும் – பெரிதும் ஊடுருவ முடியாதநிலை இருந்து வருகிறது. ஓபிஎஸ்-ன் சமூக அடையாளமும், அவரது நற்பெயரும் இப்பகுதிகளில் வேரூன்றியுள்ளன.—அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பாதிப்பு?ஓபிஎஸ் தனிக்கட்சியாகவோ, வேறு கூட்டணியோடு இணைந்தோ தேர்தல் களத்துக்கு சென்றால் – அதிமுகவின் வாக்குவங்கியை சிதைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பாஜகவுக்கு தென்மாவட்டங்களில் எதிர்பார்த்த வளர்ச்சி பெரிய அளவுக்கு தடுமாறும்.அதிமுக பாஜக கூட்டணியின் வாக்கு பெருமளவில் குறையும்.திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.ஓபிஎஸ் – விடுபடாத தாக்கம்கட்சி பிளவுகளுக்கு மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அடையாளத்தை காத்துக்கொள்ளும் தனித்துவம் கொண்டவர். சசிகலா, டிடிவி தினகரன், ஈபிஎஸ் என பலர் வந்தாலும், ஓபிஎஸ் என்ற பெயருக்கு இன்னும் தென் மாவட்டங்களில் தாக்கம் இருப்பது உண்மை.அடுத்த அரசியல் கட்டம்பாஜக கூட்டணியிலிருந்து விலகியிருப்பது ஓபிஎஸ் தனது தனித்தன்மையையும், தனி அரசியல் அடையாளத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் – 2026 சட்டமன்றத் தேர்தலில் தெளிவாக தெரியும்.இந்த மாற்றத்தால், அதிமுக கட்சியும் பாஜகவுடனான கூட்டணியும், முக்கியமான சவால்களை எதிர்கொள்வது நிச்சயம்…. திராவிட ஜீவா




