பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்றவர், கலைஞரின் நெஞ்சத்தில் தங்கமாக தடம் பதித்தவர் — திமுக என்னும் திராவிட இயக்கக் குடும்பத்தில் மட்டுமல்ல, கலைஞரின் குடும்பத்திலும் அறிவிக்கப்படாத குடும்ப உறுப்பினராக வாழ்ந்து மறைந்தவர் அருப்புக்கோட்டையின் “தங்கம்” என அழைக்கப்பட்ட தங்கபாண்டியன்.இன்றைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கபாண்டியனின் தந்தை இவர். “அரசியல் என்றாலே அதிரடி” என்கிற அரசியல் அரிச்சுவடியை தொடங்கிய திராவிட இயக்க தளபதிகளில் மாறுபட்டவர்; மென்மையான கொள்கை குன்றாக, தனது பெயருக்கேற்ற குணத்துடன் வாழ்ந்தவர். சாதி, மத எல்லைகளைத் தாண்டி ராமநாதபுரம் வட்டாரங்களில் கொண்டாடப்பட்டவர்.கலைஞரின் “தங்கம்” என அழைக்கப்பட்ட தங்கபாண்டியன், பேரறிஞர் அண்ணாவால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். சர்ச்சைகளில் ஈடுபடாதவர், சச்சரவுகளுக்கு இடம் தராதவர், அரசியல் எதிரிகளாலும் புகழப்பட்ட அபூர்வ அரசியல்வாதி. அடுத்த தலைமுறைக்கும் அரசியல் பாடங்களை தனது வாழ்வியல் மூலம் கற்றுக்கொடுத்தவர்.தங்கபாண்டியன் மறைந்தபோது, “காலம் என் தங்கத்தை பறித்து விட்டதே” என்று கலைஞர் மனமுடைந்து இரங்கினார். அவர் வெறும் மாலை சூட்டிப் போற்றப்பட வேண்டிய தலைவர் அல்ல, மணிமண்டபங்களும் நினைவு மன்றங்களும் வெறும் அரசியல் கணக்கில் மட்டுமே இருக்கக் கூடாது; அத்தகைய கொள்கை வீரர்களின் நினைவிடங்கள் மன்றங்கள் அடுத்த தலைமுறைக்கு அறிவார்ந்த, அழகான, நேர்த்தியான அரசியலை அடையாளமாகக் காட்ட வேண்டும்.அதனால், தங்கபாண்டியனுக்காக அரசு அல்லது அவரது குடும்பத்தினர் சென்னையில் ஒரு அறிவுசார் மண்டபம் எழுப்புவது, தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு நேர்மறையான பாதையை அமைக்கும்.— திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here