சென்னை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் நேற்று ரிப்பன் பில்டிங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் முக்கியமான பிரச்சனைகளை எழுப்பினர். குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் தனியார் மயமாக்கல்,அவர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுப்பது மற்றும் தெரு நாய்களின் தொல்லைகள், வண்டியில் செல்வோரை துரத்தி கடிக்கும் நிகழ்வுகள் போன்றவை விவாதிக்கப்பட்டன.இந்நிலையில், ஒரு கவுன்சிலர் எழுப்பிய தெரு நாய்கள் குறித்த கேள்விக்கு மேயர் திரு.ப்ரியா ராஜன் அளித்த பதில், அக்கறையற்ற வழக்கமான நிர்வாக மரபுச் சொற்கள் மட்டுமே, ரேபிஸ் எனும் உயிர்க்கொல்லி நோய் நகரத்தில் பல்வேறு இடங்களில் அதிகரித்து வருவதையும் கருத்தில் எடுக்காதது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.ரேபிஸ் நோய் ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறபோது, அந்த கேள்விக்கு மேயர் அளித்த பதில் உண்மையிலேயே மக்களை பூரணமாக பாதுகாக்கும் நோக்கமுள்ளதா என்று கேள்விக்குறி எழுகிறது!ரேபிஸ் தீவிர உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் ஒரு கொடூரமான நோய். இந்நிலையில் தெரு நாய்கள் மீதான கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், நோய் பரவலை கட்டுப்படுத்தும் திட்டங்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை அனைத்தும் மாநகராட்சி அளவில் சீராக நடைபெற வேண்டியது அவசியம்.”இது வழக்கமான பிரச்சனை” என்ற கருப்பொருளில் பதிலளிப்பது, மக்களின் உயிர் பாதுகாப்பை அலட்சியமாக மதிப்பது போல ஆகிவிடும். தெரு நாய்களின் பிரச்சினை என்பது விவாதிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தீர்க்கப்படவேண்டியு வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினை.மேயர் பதிலளிக்கவேண்டிய கேள்வியல்ல இது செயல்படுத்தவேண்டியது> “மக்களின் உயிர் தொடர்புடைய விஷயங்களில், எப்போதும் ‘வழக்கமான பதில்’ அளிப்பது வழக்கமாகிவிட்டது?” முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்வுகளில் தலைகாட்டுவது மட்டுமே மேயரின் பணியல்லமாநகராட்சியின் எந்த நடவடிக்கையும் மக்களின் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். ஆகையால், தெரு நாய்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அலட்சியமாக பதிலளிக்க கூடாதுநேர்மையான, விளக்கமான, செயல் திட்டத்துடன் கூடிய பதிலை மக்கள் எதிர்நோக்குகிறார்கள். அதற்கான பொறுப்பு, அரசுக்கும், மாநகராட்சிக்கும், மேயருக்கும் உண்டு.மக்களின் உயிர் ஒரு அலட்சிய பதிலில் பறிபோய்விடக்கூடாது… SOUTH INDIAN VOICE க்காக திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here