சூப்பர்ஸ்டார் ரஜினிக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஏ பி சி என்று ஆல் ஏரியா கமர்ஷியல் கிங்காக வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருபவர் எஸ் கே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன்.இவருக்கு ரஜினியை போன்றே குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆதரவு அதிகம். குறிப்பாக பெண்கள் மத்தியில் அண்ணனாக தம்பியாக இவர் அவர்களின் உள்ளத்தில் நுழைந்துவிட்டார். இவரது தந்தை தாஸ் காவல்துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். உயர் அதிகாரியாக எந்த அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாத நெஞ்சுரம் மிக்கவர் என்று பிரபல பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் பலமுறை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வயதில் அவர் தந்தை மறைந்துவிட்டாலும் அவரது பள்ளிக்காலத்திலிருந்து அவரது தந்தையின் நடை உடை மற்றும் மிடுக்கான நேர்மையான அதிகாரியாக அவரது ஸ்டைலை பார்த்து வளர்ந்தார் சிவகார்த்திகேயன்.அவருடைய குடும்பத்தினருக்கும் சிவகார்த்திகேயனை ஐ பி எஸ் படிக்க வைத்து காவல்துறை அதிகாரியாக்கவே விருப்பம்,அவருக்கும் அதுதான் விருப்பம் என்றாலும் காலம் காட்டிய வழியாக அவர் திரைத்துறையின் செல்லப்பிள்ளையானார்.இப்போது தென்னிந்திய மக்களின் ஏகோபித்த அபிமானம் பெற்ற கலைஞர் என்கிற மகிழ்ச்சி இருந்தாலும் தனது ரியல் ஹீரோவான காவல்துறை அதிகாரி தாஸ்ன் பிள்ளை என்கிற உணர்வு தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே இருக்காதல்லவா, அதனால் தனக்கு கிடைக்கும் காவல்துறை வேடங்களை செய்யும்போது தனது தந்தையின் நினைவோடு செய்வதாகவே தெரிகிறது.தற்போது கூடுதலாக ராணுவ அதிகாரி வேடம் விடுவாரா வெளுத்து வாங்கியுள்ளார்.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் அமரன் படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றது. ராணுவ அதிகாரி வேடம் என்பதால் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மிடுக்காக மெருகேற்றியுள்ள சிவகார்த்திகேயன் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படத்துக்கு உழைத்திருப்பதை வெளியான ட்ரைலர் காட்டுகிறது. இயல்பான உண்மையான ராணுவ அதிகாரி போன்ற உடல்மொழியுடன் வருகின்ற ஓரிரு நொடிகள் சொல்கின்றது அவரது அர்ப்பணிப்பை, அவர் நிச்சயம் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருக்கின்றார் என்றே சொல்லலாம்.அமரன் நிச்சயம் சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் மைல் கல்லாகவே இருக்கும் கமர்ஷியல் கதைகளின் கோப்புகளோடு 50 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனாலும் மனதுக்கு பிடித்த கதையில் வாழ்வது என்கிற எல்லைகோட்டுக்குள் நானும் இருக்கின்றேன் என்று சொல்கிறார் இந்த சகலகலா வல்லவன். வருவான் வெல்வன் அமரன்.. திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here