மெரினாவில் மெல்லிய நாயகனாக நுழைந்தவர், பத்தாண்டு இடைவெளியில் தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என்று தனது சினிமா Graph ஐ ஏற்றிக்கொண்டே போனவர், ரெமோ, ரஜினிமுருகன் படங்களின் சரித்திர வசூல் சாதனையில் ரஜினியை தவிர மற்ற முன்னணி நடிகர்கள் அனைவரையும் சாய்த்தார். சமூக வலைத்தளங்களில் மட்டும் சில நடிகர்கள் சாதனையாளர்களாக சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், சரியாத Graph உடன் சாதனை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ரஜினியின் ரசிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், இன்று ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய வசூல் நாயகனாகவும், ஃபேமிலி ஆடியன்ஸை கொண்டவராகவும் முன்னேறி இருப்பது அவ்வளவு எளிதாக நடந்ததில்லை. அதன் பின்னால் இருக்கும் கடின உழைப்பும் சரியான திட்டமிடலும்தான் அதை தீர்மானித்திருக்கின்றது. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், பொருளாதார-சமூக பின்னனியும் இல்லாமல் சினிமாவில் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை. அவ்வப்போது வானில் தோன்றும் சிறப்பு நட்சத்திரங்களைப் போல, சில அதிசய நட்சத்திரங்கள் சினிமாவிலும் கவனத்தை ஈர்ப்பதுண்டு; ஆனாலும் நிலைத்து நிற்பது சவாலானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சீயான் விக்ரம் உள்ளிட்டவர்கள் எந்த பின்னணியும் இல்லாமல் வந்தாலும், ரஜினி அளவுக்கு தொடர் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு சூழ்ச்சிகளும் சூழ்நிலைகளும் விக்ரமுக்கு இளம் நடிகர்கள் இருவரால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது அதில் தடுமாறிய விக்ரம் முன்னணி நடிகர்கள் பட்டியலிலிருந்து குறுகிய காலத்தில் வெளியேறினார்..இதே சூழ்ச்சிகளும் சதிவலைகளும் சிவகார்த்திகேயனுக்கும் உருவாக்கப்பட்டது. அதையெல்லாம் மீறி சினிமாவில் நிலைத்து நிற்பது, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஒருவரே. சமூக வலைத்தளங்களில் சிங்கங்களாக சித்தரிக்கப்படும் சில நடிகர்களின் வசூல் நிலவரங்கள் ஆதாரமற்றவை; ஆனால் சிவகார்த்திகேயனின் வசூல் நிலவரங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெற்றியைப் போல உலகமே அறிந்த சிகரம் போன்று சிலிர்த்து நிற்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி,
சிவகார்த்திகேயனின் அமரன் படம், ரஜினியின் வேட்டையன் படத்துக்கு இணையான முன்பதிவுகளையும் வசூலையும் பெற்றது—கடந்த 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடைபெறாத ஒரு அதிசயம். ரஜினிக்கு இணை என்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டாலும், அதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் கொடுக்க முடியாத நடிகர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட அதிகாரபூர்வமான அதிசய வெற்றியாக அமரன் பதிவு செய்தது. 40 ஆண்டுகால தமிழ் சினிமாவின் வசூல் சரித்திரத்தில், ரஜினி-கமல் என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு ஒரு நடிகர் கொடுத்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இப்படி தொடர் வெற்றிகளை நிலையாக குவிக்கும் நாயகனாக, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மட்டுமே இருக்கின்றார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எந்தவிதமான சினிமா, பொருளாதார, சமூக பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக தனித்து வந்து தனித்துவமாய் நிற்கும் வெற்றியாளராக தடம் பதித்திருக்கிறார். தயாரிப்பாளர்களின் வசூல் சக்கரவர்த்தியாக, காமதேனுவாக இந்த இளம் சக்கரவர்த்தி தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் தொடர்ந்து ஆட்சி செய்வார் என்பதுதான் எதார்த்தமும் உண்மையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here