பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன ஒன்றிய பாஜக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அதையே நாம் திருப்பித் தர வேண்டும் என விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர், ‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும், ஒரு அரசு ஐந்தே ஆண்டுகளில், நாம் செய்ததைப் போன்று இவ்வளவு சாதனைகள் செய்ததாக வரலாறு உண்டா? ஒன்றிய அரசின் ரேங்கிங் ஆனாலும் சரி, நேஷனல் மேகசின்கள் வெளியிடும் ரேங்கிங் ஆனாலும் சரி, எக்கனாமிஸ்ட் மாதிரி இண்டர்நேஷனல் இதழில் வரும் செய்திகள் ஆனாலும் சரி, அனைத்து ரேங்கிங்கிலும் தமிழ்நாடுதான் ‘டாப்’! தமிழ்நாடுதான் ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட்’.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. இதை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம். பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன ஒன்றிய பாஜக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அதையே நாம் திருப்பித் தர வேண்டும்’ எனக் கூறினார்.


