நடிகரும் ரேஸருமான அஜீத்குமாரைச் சந்தித்து உரையாடிய புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
கார் ரேஸிங் மீது கொண்ட காதலால், நடிகர் அஜித் குமார் பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார். தற்போது ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்திருந்தனர். தற்போது, ரேஸர் அஜித்தை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.



