சென்னை அடுத்த போரூரில், தென்னிந்தியாவின் ஷாருக்கான் என்றும், சின்ன ரஜினி என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கியமான நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ரசிகர்கள் வழக்கமான நடிகர்களின் ரசிகர்களைப் போல் இல்லாமல், கட்டுப்பாட்டுடன் அதே நேரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் விஜய், தனுஷ் போன்றவர்கள் ரசிகர்களைப் பயன்படுத்தும் விதமும், நடிகர் அஜித் பொதுவெளியில் ரசிகர்களை நடத்தும் நாகரீகமற்ற விதமும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இவர்களைப் போல் குடும்ப மற்றும் பொருளாதார, சமூகப் பின்னணி எதுவுமே இல்லாமல் தனியாக வளர்ந்த சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் நிதானமும் பக்குவமும் இருப்பதாகவே திரை மற்றும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது.
இந்தப் பக்குவமும் நிதானமும் மன்ற நிர்வாகிகளிடமும் வெளிப்படுகின்றது. ஒரு தேர்ந்த, பக்குவமான நிர்வாகியால் நடத்தப்படும் அரசியல் கட்சியின் அரங்கக் கூட்டத்தைப் போல், கட்டுப்பாட்டுடன் ரசிகர்கள் கூட்டத்தை நடத்தும் சிவகார்த்திகேயன், ரஜினி, கமல் போன்ற அனுபவமிக்க நடிகர்களைப் போன்று அரங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இதனைப் பார்த்து, விஜய், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு, “பாடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று அரசியல் மற்றும் திரை விமர்சகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு, சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் கட்டுப்பாட்டுடன் நடைபெற்றுள்ளது.
ரசிகர் மன்ற நிகழ்ச்சியாக நடைபெற்றாலும், போரூரில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு, ரசிகர்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுத்தரும் நிகழ்ச்சியாகவே வெளிப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம், சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றம் அடுத்தகட்டமாக எவ்வாறு பயணிக்கப்போகிறது என்பதற்கான முக்கியமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.



