கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் கூட்டணியை விட்டு விலகிச் சென்றது. விஜய் தலைமையிலான அரசியல் கூட்டணியிலும் அமைச்சரவையிலும் பங்கேற்றது. மூத்த தலைவர்களான பா. சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி கூட்டணியையும் சிதைத்தனர்; தங்களது நன்மதிப்பையும் இழந்தனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மட்டும் தான் இன்றளவும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். ஸ்லீப்பர் செல்களாக அறியப்பட்ட பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக் தாகூர் போன்றவர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட ராகுல் காந்தியை, பா. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கூட எதார்த்தமான சூழ்நிலையைச் சொல்லி அரசியலைப் புரிய வைக்கவில்லை என்கிற ஆதங்கமும் கோபமும் திமுகவினருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. இதற்கிடையில் காங்கிரஸ் வெளியேறிய பிறகு, திமுக தொண்டர்கள் மத்தியிலும் இனி காங்கிரஸ் எந்த காலகட்டத்திலும் நமது கூட்டணியில் இருக்கக் கூடாது சேர்க்கவும் கூடாது என்று வெகுண்டு எழுந்து பேசி வருகின்றனர்.

தற்போதும் கூட இதே கருத்தைத்தான் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து பேசி வருகின்றார். இதற்கிடையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் சரிந்து வருகின்றதால், மிக முக்கியமான நேர்மையான பார்ட்னராக இருந்த திமுகவிற்கே இந்த நிலை என்றால், நமது நிலை என்ன என்று வட இந்திய காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

தொடர்ந்து விஜய்யின் பாஜக ஆதரவு அரசியலும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படும் நடவடிக்கையும் ராகுலுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் துணிவாக எதிலும் செயல்படவில்லை; செயல்படவும் மாட்டார் என்கின்ற அரசியலை இவ்வளவு தாமதமாக ஓர் அகில இந்திய தலைவர் புரிந்துகொண்டுள்ளார் என்பதும் டெல்லி வட்டாரத்தில் நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே தொடர்ந்து இந்தியா கூட்டணியின் பல்வேறு கூட்டங்களில் திமுக இல்லாததால், கொள்கை சார்ந்த எதிர் அரசியலைச் செய்ய முடியாமல் திணறுகின்றனர். அதனால் மீண்டும் ஸ்டாலினிடம் தூது விட்டு, தூது விட்டு ஓய்ந்து போயுள்ளாராம் ராகுல் காந்தி. “காங்கிரஸ்” என்ற பேச்சுடன் யாரும் இங்கே வரவே கூடாது என்று ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் கராறாகத் தெரிவித்து வருவது டெல்லி காங்கிரஸ் தலைவர்களை கலக்கமடையச் செய்துள்ளதாம்.

மிகவும் கடுமையான வார்த்தைகளை ஸ்டாலின் பேசியுள்ளதாக திமுக தரப்பு தகவல்கள் சொல்கின்றன. புதுச்சேரியில் காங்கிரஸ் டெபாசிட் இழக்க வேண்டும் என்கிற அளவில் அவர் பேசியது பொதுவெளியில் பகிரப்படும் வேளையில், “காங்கிரஸ் இனி கூட்டணியில் வந்தால் காலால் எட்டி உதைக்க வேண்டும்” என்கிற அளவில் அவர் பேசியதாகவே தகவல்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றன. “இனி எந்த காலகட்டத்திலும் திமுக–காங்கிரஸ் கூட்டணி வைக்கவே கூடாது” என்கின்ற தொண்டர்களின் மனநிலையைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். இனி தொண்டர்கள் அரசியல்தான் திமுகவில் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டாராம் ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here