மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரத்திலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண்.06130), அதேநாள் காலை 11.45 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும் மறுமார்க்கமாக, திருவண்ணாமலையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மதியம் 12.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06129), அதேநாள் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
விழுப்புரத்திலிருந்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.40 மணிக்குப் புறப்பட்டு வேலூர் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06167), மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் சென்றடையும். மறுமார்க்கமாக, வேலூரிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06168), அதேநாள் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

விழுப்புரத்திலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06049), அதேநாள் மதியம் 1.05 மணிக்கு காட்பாடி சென்றடையும். மறுமார்க்கமாக, காட்பாடியிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06050), அதேநாள் மாலை 5.10 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்” என கூறப்பட்டுள்ளது.

