நடிகை திரிஷா, தவெக தலைவர் விஜய் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர். எந்த உள்நோக்கத்திலும் அவர் அப்படிப் பேசவில்லை, யாரையும் காயப்பாடுத்த வேண்டும் என்றோ, பெண்களை இழிவு படுத்த வேண்டும் என்றோ செயல்படும் நபர் அவர் இல்லை; பெண்களை வைத்து மிக மோசமாக திமுக, காங்கிரஸ் தான் பேசிக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய கட்சியாக பாஜக உள்ளது. பெண் நிர்வாகிகள் நாங்கள் நிறையப் பேர் கட்சியில் இருக்கிறோம். பெண் நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவர் அவர்தான் என பேட்டி.

