கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரிவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட உள்ளது. SOUTH INDIAN VOICE (English &Tamil) வார இதழ் மற்றும் இணையதளம் மூலம் POLITICAL VOICE என்கிற பெயரில் கருத்துக்கணிப்பினை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி நகராட்சி என்றால் வார்டுகள் வரை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு கருத்து பதிவு செய்யப்படும். கிராமப்புறங்களில் ஒவ்வொரு குக்கிராமத்திலிருந்தும் ஒருவர்,மாநகர, நகர மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டிலிருந்தும் ஒருவர் வீதம் இதில் பங்கேற்பார்கள்.
இந்த ஆய்வில், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், மக்கள் சந்திப்பு, தொகுதி மேம்பாட்டு பணிகள், சட்டமன்றத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து வாக்காளர்களிடம் கேட்கப்படும். மேலும், மக்களின் எதிர்பார்ப்புகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத அடிப்படை பிரச்சினைகள் குறித்த கேள்விகள் வைக்கப்படும்.
இந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேரின் கருத்துகளை தொகுத்து, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் செயல்திறன் மற்றும் 2026 தேர்தலில் அவர்களின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான பகுப்பாய்வு செய்து வெளியிடப்படும். SOUTH INDIAN VOICE (English &Tamil weekly ) இணையதளம் மற்றும் வார இதழில்.. காத்திருங்கள்..




