கடந்த வாரம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள “மாதவிடாய்” தொடர்பான தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அரசியல் சாசன பிரிவு 21ன் படி மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் சுகாதாரமான கழிவறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தரமான சானிட்டரி நாப்கின்களை மாணவிகளுக்கு விலை இல்லாமல் வழங்க வேண்டும் என்பதையும் இதை செய்யாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அமலாவதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

