சென்னையில் நேற்று ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா நடந்தது. காலையில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த வரவேற்பில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணமக்கள் சாஹில் ஜெகன் – வேதிகா ஜோடியை வாழ்த்திய அவர், அங்கிருந்தவர்களுக்கு கியூட் போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். காதல் திருமணம் என்பதால் இருவீட்டாரின் குடும்ப மரபுப்படி நடைபெற்றதாக கூறப்படுகிறது.


