தொடர்ந்து பத்து வருடங்கள் எதிர்கட்சியாக பயணித்து கடும் சவால்களை எதிர்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக,கலைஞரின் மறைவுக்குப்பிறகு மிகப்பெரிய அரசியல் சவால்களை எதிர்கொண்டு நெருக்கடியான காலகட்டத்தில் திமுகவை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை திறம்பட கையாண்டு பத்து வருட இடைவெளிக்கு பின் ஆட்சியை திமுக பிடிக்கும் அளவிற்கு தனது உழைப்பால் வெற்றி பெற்றவர் மு. க. ஸ்டாலின், கடந்த 2016ம் ஆண்டே நூலிழையில் நழுவிய வெற்றியை 2021 ஆம் ஆண்டும் மகடும் சவால்களுக்கு இடையே தான் பெற்றார்.கலைஞரின் மறைவிற்குப் பிறகு கட்சித்தலைவராக பொறுப்பேற்றபோது கலைஞரைப்போல் எழுத்தோ பேச்சோ இலக்கிய நயமோ என்னிடத்தில் இல்லை ஆனால் கொள்கையுடன் என்னால் தொடர்ந்து உழைக்க முடியும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்பதே எனது தாரகமந்திரம் என்று பேசியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கடினமாக உழைத்து ஆட்சியைப் பிடித்தார். ஆட்சியைப் பிடித்தவுடன் கலைஞரின் அமைச்சரவையில் இடம் பெற்ற மூத்த அமைச்சர்கள் பலரையும் தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெறச்செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை மரியாதையை கொடுத்தார்.கட்சியில் மிகப்பெரிய மாறுதல்ல்களை கொண்டு வரவில்லை ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடியாக பெரும்பாலும் எந்த சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் அதிகாரிகளை நியமித்தது பாராட்டப்பட்டது. அந்த அதிகாரிகளில் ஒருவர்தான் தற்போது நிதித்துறை செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஐ ஏ எஸ் முதல்வரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்ட உதயசந்திரன் மீது பொதுவாக எந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளும் இருந்ததில்லை இப்போதும் கூட தனிப்பட்ட அவரது நிர்வாகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளோ சர்ச்சைக்குரிய விமர்சனமோ எதுவும் வெளிப்படையாக இல்லை ஆனால் முதலமைச்சரிடம் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அதிகாரியாக அமைச்சர்கள் மட்டத்திலேயே அவர் பார்க்கப்படுவது அவர் மீதான விமர்சனங்களுக்கு வழி வகுக்கின்றது.குறிப்பாக திமுகவிற்கு எதிரான மனநிலையுடனே செயல்படும் ஊடகங்களுடன் அவர் நெருக்கமான உறவை கொண்டிருப்பது இந்த விமர்சனங்களுக்கு கூடுதலாக வலு செய்கின்றது என்பதை மறுக்க முடியாது சமீபத்தில் அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ததில் இவரின் பங்கு மிகவும் அதிகம் என்று தலைமைச் செயலாக வட்டாரங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றன.குறிப்பாக திமுகவின் கடந்த 40 ஆண்டுகளாக அசைக்க முடியாத நிர்வாகிகளாகவும் அமைச்சர்களாகவும் மாவட்ட செயலாளர்களாகவும் வலம் வந்த பலரை கட்டம் கட்டும் அரசியல் இவர் செய்து வந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர் நிதித்துறை செயலாளர் என்கின்ற எல்லைகளை எல்லாம் மீறி அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முதல்வர் கவனத்திற்கு இவர் கொண்டு செல்வதும் அதை முதல்வர் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிகின்றது.திமுகவின் பலமே அதன் மூத்த நிர்வாகிகள்தான் பெரும்பான்மை நேரங்களில் குறிப்பாக எதிர்க்கட்சியாக இருந்த போதும் கட்சியை அவரவர் பகுதிகளில் வலிமையாக வைத்திருந்தனர்.அதனால்தான் இவர்கள் குறுநில மன்னர்கள் என்று கூட அரசியல் எதிரிகளாலும் விமர்சகர்களாலும் விமர்சிக்கப்பட்டாலும் அவர்களின் உறுதியான செயல்பாடுகள் கட்சிக்குத் தேவை என்கின்ற அடிப்படையிலேயே அவர்களின் பொறுப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டன.இப்படி 40,50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியிலும் ஆட்சியிலும் மிகமுக்கிய பங்கு வகித்த இந்த நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முதலமைச்சரிடம் தெரிவிப்பது உதயச்சந்திரன்தான் என்று அமைச்சர்களே தெரிவிக்கின்றனர்.இன்னும் சொல்லப்போனால் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ எப்படி இருந்தாலும் திமுகவை மட்டுமே அதிகப்படியாக குறை சொல்லும் ஒரு ஊடகத்திலும் இவரின் நெடுக்கம் மிக மிக அதிகம் அந்த ஊடகத்தில்தான் தொடர்ந்து அமைச்சர்களை பற்றி எதிர்மறை செய்திகள் கட்டுரைகளாக வெளிவர உதயச்சந்திரன்தான் காரணம் என்று அதிகாரபூர்வதகவல்கள் தெரிவிக்கின்றன.ஒரு அரசு அதிகாரி தன்னுடைய பணியை செவ்வனே செய்வதே அவர் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும் ஆனால் எப்பொழுதும் தனது கம்யூனிசநண்பர்கள் ஊடகநண்பர்களுடன் தான் அவர் தனது நேரத்தை செலவழிக்கின்றார்.கூட்டி கழிச்சுப்பார்த்தா கணக்கு சரியாதான் வரும்போல இப்படிப்பட்ட அதிகாரியை நம்பி தான் தனது 40 வருட சகாக்களை முதல்வர் இழந்துவருகின்றாரோ என்கின்ற கவலை மூத்த நிர்வாகிகள் நிலவிவருகின்றது.இந்த அதிகாரி குறித்த செய்திகளை யாரும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார்களா என்பது தெரியவில்லை? மேலும் இந்த மீதம் இருக்கும் பத்துமாத கால ஆட்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்து நெருக்கடிகளுக்கு உள்ளாக்க திட்டம்போட்டிருக்கின்றது என்கிற செய்திகள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் செந்தில் பாலாஜி கைது மற்றும் பொன்முடி அமைச்சர் பதவி பறிப்பு நடவடிக்கைகளிலும் உதயச்சந்திரன் திருவிளையாடல்கள் இருப்பதாக பேசப்படும் நிலையில் கே என் நேருவையும் வெளியேற்ற திட்டம் போடுகின்றார் என்று தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.மத்தியில் ஆளும் பாஜகவின் எண்ண ஓட்டமும் இவவரது நீண்டகால நட்பில் இருக்கும் அந்த ஊடகத்தின் எண்ணமும் திமுகவை ஊழல் கட்சியாக அடையாளப்படுத்துவதில் ஒருங்கிணைந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது.தற்போது உதயச்சந்திரன் சிந்தனையும் ஒரே புள்ளியில் வந்து நிற்கின்றன. கே என் நேரு போன்ற செயல் வீரர்கள் கட்சியின் தூண் இவரை குறிவைத்து நடக்கும் இந்த சதியை முதல்வர் எப்படி எதிர்கொள்வார்?காத்திருப்போம் முற்றிய உதயசந்திரன்கள் கடைக்கு வராமலா போகும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here