சமீபத்தில் நடந்த லாக்கப் மரணம் மற்றும் எஸ் பி மீதான நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும் சமூவலைதள ஆர்வலர்கள் என்கிற பெயரில் இயங்கும் சிலரும் சட்டம் ஒழுங்குதுறை டிஜிபி மீது வைத்துக்கொண்டிருந்தனர்.இவர் மீது மட்டுமல்லசென்னை மாநகர கமிஷனர் அருண் அவர்களைப்பற்றியும் தொடர்ந்து எதிர்மறை செய்திகளை பரப்புவதில் உள்நோக்கம் இருக்கின்றது என்று காவல்துறை வட்டாரங்களிலும் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களிலும் அழுத்தமாக பேசப்படுகின்றது. தமிழகசட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் எட்டு, ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் களம் இப்போதே சூடு பிடிக்கத்தொடங்கிவிட்டதன் வெளிப்பாடுதான் சட்டம் ஒழுங்குதுறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் அருண் இருவர் மீதான அவதூறு செய்திகளுக்கான மிக முக்கிய காரணம் என்றும் பேசப்படுகின்றது.பொதுவாகவே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் எந்த ஆளுங்கட்சி வந்தாலும் சற்று ஏறக்குறைய ஒரேமாதிரியான நிலைமைதான் இருக்கும் ஆனால் திமுக ஆட்சி வரும்போது மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலை தூக்கி நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவார்கள் என்கின்ற குற்றச்சாட்டுகள் திமுக தரப்பில் வைக்கப்படும்.அதையும் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விடவும் முடியாது அப்படி ஒரு சூழ்நிலையைதான் தற்போதும் உருவாக்குகின்றனர் என்று அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர்கள் பல்வேறு நேர்காணல்களில் பேசுகின்றனர்.தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்பும் பிற்போக்கு சக்திகளின் சதி அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்குப்பிறகு சென்னை மாநகர கமிஷனராக அருண் அவர்கள் பொறுப்பேற்றார்.அதற்க்குப்பிறகு சென்னை மாநகரத்தில் கொலை குற்றங்களும் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைமருந்து விற்பவர்களும் வெகுவாக குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றது அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பேற்ற பிறகு சிறு சிறு கொலைகளும் குறிப்பாக தனிநபர் முன் விரோதத்தில் நடக்கும் கொலைகளும் கூட சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்படுகின்றது.எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சமூக வலைத்தள ஆடுவாளர்களும் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து பதிவிடுவதும் பேசுவதும் எழுதுவதும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.அதற்கான பின்னணியாக மத்திய உளவுத்துறை ஆதரவுடன்சில காவல்துறை அதிகாரிகள்,ஐ ஏ எஸ் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து சில பிற்போக்கு சக்திககளும் செயல்படுவதாக காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகின்றது.இன்னும் சொல்லப்போனால் சாதிய மத ரீதியாகவே டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் கமிஷனர் அருண் உள்ளிட்டவர்களை மத்திய உளவுத்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற்போக்கு சக்திகளும் அரசியல் எதிரிகளும் அடையாளப்படுத்துவதா க வலுவான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக அரசு அரசுக்கும் காவல்துறையினருக்கும் உளவுத்துறைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேற்கண்ட அதிகாரிகளை எப்படியாவது வருகின்ற சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்குள் மாற்றிவிட கடுமையாக முயற்சி செய்வதாகவே தெரிகின்றது.இவர்களின் குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு ஒரு வேலை மாநில அரசு இவர்களை பணி மாற்றம் செய்வதாக இருந்தால் அடுத்து வரும் அதிகாரிகளை மத்திய உள்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முயற்சிகள் நடக்கின்றன. என்ன செய்யப்போகிறது மாநில அரசு… திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here