36 ஆண்டுகளுக்கு முன்பு, 1991 நவம்பர் 5 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஜீவி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான தளபதி திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு ட்ரெண்ட் செட்டர் படம் என்று சொன்னால் மிகையாகாது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம், இந்திய சினிமாவில் ஒரு மாநில மொழித் திரைப்படம், இந்திய சினிமாவின் உச்ச வியாபாரம் என்று அழைக்கப்படும் இந்தி சினிமாவின் வியாபாரத்தை உடைத்த முதல் மாநில மொழிப் படம் என்கிற பெருமையைப் பெற்றது.
1930-களில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தி சினிமாவின் ஆதிக்கமே அனைத்து மாநிலங்களிலும் இருந்தது. மற்ற மாநில மொழிப் படங்கள் அந்தந்த மாநிலங்களில் வெளியானாலும் கூட, ஒட்டுமொத்த இந்திய அளவில் இந்திப் படங்கள் மட்டுமே அதிகமாக வெளியானது. தயாரிப்புச் செலவிலும் அதிகமான பிரம்மாண்டப் படங்களும் வெளிவந்தன. உலக அளவில் வெளியீட்டிலும் இந்தி சினிமாவின் ஆதிக்கமே இருந்தது. அப்படிப்பட்ட சூழலில், ஒரு மாநில மொழித் திரைப்படம், ஒட்டுமொத்த இந்தியாவில் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தின் படம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் வரலாற்றையே உடைத்தது என்றால், நிச்சயமாக இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திய படம் தான் தளபதி என்று சொன்னால் யாராலும் மறுக்கவே முடியாது.
ரஜினிகாந்த் என்கிற ஒற்றை மனிதரின் வசீகரமும், திரை ஆளுமையும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆக்கிரமித்து இருந்த காலகட்டங்கள் அவை. அப்படிப்பட்ட சூழலில் தொடர் வெற்றிகளையும் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினியின் ராஜாதி ராஜா திரைப்படம், ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் ஷோலே என்னும் இந்திப் படத்தின் வசூலை முறியடித்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்திருந்தது. அதன் எதிரொலிதான் ரஜினியின் சம்பளம் இந்தியாவில் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் வாங்கியவர் என்கிற பெருமையையும் பெற்றுக் கொடுத்தது.
இந்தத் தளபதி படத்தின் மூலம் இந்தியாவில் முதல் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ரஜினிகாந்த். இந்தியாவில் ஒரு மாநில மொழித் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படத்தின் வியாபாரத்தைத் தாண்டிய முதல் படமும் தளபதி படம்தான். டி-ஷர்ட், கீ செயின் முதல் ஒவ்வொரு பொருட்களிலும் தளபதி என்கிற பெயர் பொறித்த பொருட்களின் விற்பனையும் படுஜோராக நடந்தது. கேசட் விற்பனையிலும் இந்திய அளவில் சாதனை படைத்தது. நள்ளிரவுக் காட்சி என்கிற புதிய சரித்திரத்தையும் எழுதியது.
இப்படி இன்றளவும் உலக சினிமாக்கள் வரிசையில் இந்தியத் திரைப்படங்களின் வெளியீடும் வியாபாரமும் தொடர்ந்து விவாதிக்கப்படுவதின் தொடக்கம் இந்தத் தளபதி என்கிற ஒரு மாநில மொழித் திரைப்படம்தான். இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு, பல சரித்திர சாதனைகளை இந்தியத் திரையுலகில் தொடங்கி வைத்த முதல் திரைப்படம் தளபதி!
#தளபதி #ரஜினிகாந்த் #சூப்பர்ஸ்டார் #மணிரத்னம் #ஜீவிபிலிம்ஸ் #தமிழ்சினிமா #இந்தியசினிமா #தளபதி1991 #Rajinikanth #Thalapathy #ManiRatnam #SouthIndianVoice #தளபதி37வருடசரித்திரம்



