அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாக கூறப்படும் காணொளி, மியா சமூகத்துக்கு எதிரான நேரடி வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக கேரள முதல்வர் பிணராய் விஜயன் தனது ‘X’ சமூக வலைதள பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் லாபத்திற்காக பேசும் பேச்சு இது என்று குறிப்பிட்டுள்ள அவர் இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை என்றும், இது நாட்டின் பன்முகத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் மௌனம், பிரிவினை அரசியலில் அவர்களின் நிலையை காட்டுகிறது என்றும்
மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இத்தகைய சமூக விரோத வெறுப்பு அரசியலை எதிர்த்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்க வேண்டும் என்றும் பிணராய் விஜயன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.




