இந்தியா வளர்ந்தால் தமிழ்நாடு தானாக வளரும் என ஐஜேகே மாநாட்டில் பாரிவேந்தர் பேச்சு
“பாரதம், தமிழ்நாடு என இரண்டும் எங்களுக்கு ஒன்று தான். இந்தியா வளர்ந்தால் தமிழ்நாடு தானாக வளரும். பாராளுமன்றத்திலிருந்தேனே ஒழிய, ஏன் வந்தோம் என்று வருத்தமாக இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாம் திட்டமிட்டு வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தை ஒரு நாளும் நடத்தவிட மாட்டார்கள். அதன் மூலமாக வளர்ச்சியை தடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இன்னும் கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியா வளரவில்லை என்றால் தமிழ்நாடு வளராது. எந்த நேரமும் எதிர்ப்பு, எதிர்ப்பு என்று செய்து கொண்டிருந்தார்கள். கல்விக்கான நிதி வரவில்லை என்கிறார்கள், நீங்கள் முறையான முறையில் கேட்டால் நிதியை கொடுப்பார்கள்.

எப்போதும் எதிர்ப்பு என்பதே தனது கொள்கை என்றால் அதனுடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு தான். கட்சி நடத்துவதால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. பாராளுமன்றத்திற்கு சென்ற போது முதல் நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போது என்னுடன் வந்த தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாரும், தமிழ்நாடு வாழ்க, கட்சியில் இருக்கிற அத்தனை தலைவர்களும் வாழ்க என்று சொல்லி உறுதிமொழி எடுத்தார்கள். அன்றைக்கே எனக்கு உடன்பாடு இல்லை. நான் இந்தியா வாழ்க, தமிழ்நாடும் வாழ்க என்று கூறி உறுதிமொழி எடுத்தேன். அன்றைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் தலைவர்களை குறிப்பிட்டார்களே ஒழிய, அவர்கள் யாரும் நாடு, மாநிலம் என்று சொல்லவில்லை. அந்த தலைவர்கள் எல்லாரும் ஊழல் உற்பத்தியாளர்கள்.




