உலக சினிமா சரித்திரத்தில் முன்னணி நடிகர், நடிகைகளின் உச்சநிலை பெரும்பாலும் சில ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். சிலர் 10 முதல் 15 ஆண்டுகள் வரை “நம்பர் ஒன்” நிலையில் இருப்பதே மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தொடர்ந்து யாரும் இருந்ததும் இல்லை ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை, அர்னால்ட், அமிதாப், ஜாக்கி சான் போன்ற சாதனையாளர்ர்களின் உச்சகட்ட காலமும் இதே வரம்பிற்குள்தான் வந்துவிடுகிறது.தமிழ் திரை உலகின் ஜாம்பவான்கள் – எம்.கே.டி. தியாகராய பாகவதர், பி.யு. சின்னப்பா, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல்ஹாசன் போன்றவர்களுக்கும் இந்த விதியே பொருந்தியது. ஆனால், விதியை மீறும் விதிவிலக்கான ஒருவராக ஒரு அரசன் உருவானார்.துணை நடிகராகவும் வில்லனாகவும், “கதாநாயகனுக்கான அம்சங்கள் இல்லை” என்ற விமர்சனங்களுடனும் திரை உலகில் நுழைந்தவர், விண்ணிலிருந்து மண்ணை நோக்கி பாயும் ராக்கெட்டைப்போல வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆட்சி செய்த காலகட்டத்திலேயே காந்த சக்தி போல ரசிகர்களை ஈர்த்தார். கமல்ஹாசன் சகலகலாவல்லவனாக உச்சத்தில் இருந்த காலத்திலும், தனது தனித்துவமான ஸ்டைலும், வித்தியாசமான நடிப்பும், சுறுசுறுப்பும் மூலம் அவரை மீறி முன்னணியில் அமர்ந்தார்.அவர் தான் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினி.கமல்,பாக்யராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்தர் போன்ற வலுவான போட்டியாளர்களை எதிர்கொண்டு, வீழாது “நம்பர் ஒன்” இடத்தை தக்க வைத்தது, இயற்கையை மீறிய இமாலய சாதனை. அடுத்த தலைமுறையில் பிரபு, கார்த்திக்,சத்யராஜ் போன்றவர்களுடன் மட்டுமல்லாமல் திடீர் வெற்றிகளின் மூலம் கொஞ்சநாள் போட்டியில் இருந்த ராமராஜன், சரத்குமார், பிரபுதேவா, விக்ரம் போன்றவர்களும் போட்டிக்கு நின்றனர். இவர்கள் வெற்றிகளை பெற்றாலும், ரஜினியின் வியாபார அளவின் 30-40% க்கும் மேல் செல்ல முடியாத சூழ்நிலைதான் நிலவியது. அஜித், விஜய் ஆகியோரும் 90கள் காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை எட்டவில்லை.2000 களின் தொடக்கத்தில் விக்ரம், சூர்யா, விஷால் போன்றவர்கள் தொடர்ச்சியான வர்த்தக வெற்றிகளை பெற்றாலும், ரஜினியின் அளவை நெருங்க முடியவில்லை. சமூக வலைத்தளங்கள் உருவான பின் எதிர்மறை கருத்துக்கள் பரவியிருந்தாலும், மற்ற நடிகர்கள் எவரும் ரஜினியின் வசூல் எல்லையை தாண்ட முடியாத நிலையே தொடர்கிறது.இன்று ஐந்து தலைமுறைகள் கடந்தும் ரஜினி முன்னணியில் உள்ளார். 40 ஆண்டுகளைத் தாண்டி, 50 ஆண்டுகளை நோக்கி பாயும் அவரது வெற்றிக் குதிரை, உலக சினிமா பேரதிசயங்களில் ஒன்றாகும். தற்போதைய தலைமுறை நடிகர்கள் – சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கும் அவரது வசூல் இலக்கு ஒரு பென்ச்மார்க்காகவே உள்ளது.நான்கு தலைமுறை நடிகர்களை ஓரங்கட்டி, ஐந்தாம் தலைமுறையுடனும் “என்னை வென்று காட்டுங்கள்” என்கிற நிலைப்பாட்டுடன் ஆரோக்கியமான போட்டியில் நிற்பது – உலக சினிமாவில் எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று. அஜித், விஜய் போன்ற நான்காம் தலைமுறை நடிகர்களும் வியாபாரம் மற்றும் வசூலில் ரஜினியின் இலக்கை எட்ட முடியாமல் அஜித் ரேஸ்க்கும் சற்றேற க்குறைய விஜய் தனது சினிமா வாழ்வின் இறுதி கட்டத்தில் தனது தோல்விகளை மறைக்கவே அரசியலுக்கு சென்றதாக சினிமா வட்டாரங்களே உறுதியாக தெரிவிக்கின்ற நிலையில் ரஜினியின் வெற்றி எட்டாம் அதிசயத்தில் சேர்க்க வேண்டிய சாதனை.இன்றும் ஐந்தாம் தலைமுறை நடிகர்களும் ரஜினியின் வெற்றிப் பாதையையே நோக்கி பயணிப்பது, அவரது திரை ஆளுமையின் அடையாளம் தான் அவரது வணிகம் தமிழ்ச் சினிமாவின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.அரை நூற்றாண்டு ஆட்சி செய்த அரசன் ரஜினியை வாழ்த்துகிறது சவுத் இந்தியன் வாய்ஸ்… திராவிட ஜீவா