டந்த சட்டமன்ற தேர்தலில் திமுக எனது அதிமுக வாழ்த்தியமைக்கும் என்று தமிழ்நாடே எதிர்பார்த்திருந்த வேளையில், அடிப்படை கட்டமைப்பே இல்லாத த வெ க ஆட்சியை பிடித்தது ஆச்சரியமாக இருந்தது என்பதைவிட அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. அது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியதே உண்மை.

கொளத்தூர் தொகுதியில் அன்றைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததும், அவர் தனது தோல்வியை எதிர்த்து மூன்று நாளில் தேர்தல் கமிஷனில் கேட்டிருந்த விளக்கத்திற்கு மாறாக 100 நாட்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், விவிபேட் ஸ்லிப் 45 நாட்களுக்குள் அழிந்து விடக் கூடிய நிலையில், தேர்தல் வழக்குகள் தேர்தல் முடிந்து 100 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற அடிப்படையில், தேர்தல் கமிஷனின் திட்டமிட்ட தாமதத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போதே, இ விஎம் மிஷின் குறித்த சர்ச்சைகளும் மர்மங்களும் கேள்விகளும் வெகுஜன மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்களை 100 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கியதால் கட்டாயமாக கொண்டு வரப்பட்ட இடைத்தேர்தல்களில், திமுகவும் அதிமுகவும் உங்களது அடிப்படை வாக்கு வங்கிகளையும் கட்டமைப்பையும் இழக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் சுற்றி சுழன்று தேர்தல் பணியாற்றுகின்றனர்.

திமுக தோல்வியில் துவண்டு விட்டது, அதிமுக பிளவுப்பட்டுவிட்டது என்றெல்லாம் தொடர்ந்து விவாதங்களும் செய்திகளும் திட்டமிட்டு தொலைக்காட்சி காட்சி ஊடகங்களில் பரப்பப்பட்டு த வெ க வால் திணிக்கப்பட்டது. இந்த ஊடகங்களின் முகத்திரை கிழிக்கப்படும் அளவிற்கு களத்தில் திமுக அதிமுக என்றே போட்டி இருப்பது நமது சவுத் இந்தியன் வாய்ஸ்ன் சர்வேகளில் எதிரொலிக்கின்றது.

மத்தியில் ஆளும் பிஜேபியின் துணையுடன் முறைகேடாகத்தான் விஜய் வென்றிருக்க வாய்ப்பு என்பதையே இந்த இடைத்தேர்தலில் முடிவுகள் எதிரொலிக்கும். களமும் அதைத்தான் சொல்கின்றது. அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாத த வெ க சோசியல் மீடியாக்களின் துணையுடனும் ஊடகங்களின் துணையுடனுமே தனது அதிகார பலத்தை பிரயோகப்படுத்துகின்றது.

பணம், பிஜேபி ஆதரவு, ஊடக பலம் — இதன் பின்னணியில் ஆதவ் அர்ஜுனா தான் விஜய்யை முதலமைச்சராகியுள்ளார் என்பதை இனிவரும் அரசியல் நாகர்வுகளும் முடிவுகளும் நிச்சயம் உறுதிப்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here