நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்து, தொடக்கத்தில் தனிப்பட்ட திறமைகள் என்று எதுவுமே இல்லாமல் பல ஆண்டுகள் சூர்யாவும், சமூக ஆர்வலராகவும் புரட்சிகர சிந்தனை கொண்ட இயக்குனராகவும் இருந்த அமீரின் உதவியால் முதல் படத்திலேயே வெற்றியைச் சுவைத்த நடிகர் கார்த்தியும், தங்களுக்குப் பிறகு சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் படிப்படியாகக் கஷ்டப்பட்டுப் போராடி தங்களைத் தக்கவைத்துக்கொண்ட நடிகர்கள் மீது வெறுப்பையும் வன்மத்தையும் கொட்டுவதற்கு சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் போன்றே மாஃபியா கும்பல்களைப் பயன்படுத்துவது திரைத்துறையின் நலனுக்கும், தனிமனித உயர்வுக்கும், மன அமைதிக்கும் சரியாக இருக்காது.

அடுத்தவர்களைப் பொறாமையுடன் பார்க்கும் அஜித், விஜய் வரிசையில் சிவகுமார் குடும்பமும் இணைவது சரியாக இருக்காது. ரஜினிக்கு எதிராக அஜித், விஜய் இருவருமே தொடர்ந்து இன்றுவரை மறைமுகமாக கூலிப்படைகளை வைத்து இயக்குவதை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக உணர முடியும்.

இவர்கள் நடிகர் விக்ரம் வளர்ச்சிக்கு எதிராகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர். தற்போதைய இளம் முன்னணி நடிகர் ஒருவரின் வளர்ச்சியையும் வெற்றியையும் பொறுத்துக்கொள்ளாமல் செயல்பட்டதும் மறுக்க முடியாத உண்மை.

இதில் சூர்யா, கார்த்தி இருவரும் பொதுவெளியிலேயே பேசுவது அவர்களுக்கான தரத்தை குறைக்கவே செய்யும். இத்தனைக்கும் யோகா உள்ளிட்ட மனதைக் கட்டுப்படுத்தும் கலைகளின் திரைத்துறை முகமாக சிவகுமார் காட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.. திராவிடஜீவா

சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது வளர்ச்சியை நோக்கி அவர்களின் கவனம் இருப்பதே அவர்களின் மன அமைதிக்கும் சரியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here