தமிழ் சினிமாவின் பாரம்பர்யமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கமர்ஷியல் கிங் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் SK27 அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கிய நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தயாரிப்பாளர் தியாகராஜன் தலைமையிலான சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய அனுபவத்துடன் கமர்ஷியல் கிங் SK வுடன் புதிய கூட்டணியில் களமிறங்கியுள்ளது.
ஏற்கனவே நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வு, ஆக்ஷன் என பல்வேறு களங்களில் தனது நடிப்புத் திறனை சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி வெளிப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன், SK27 மூலம் மீண்டும் ஒரு வித்தியாசமான கமர்ஷியல் பயணத்தை தொடங்குகிறார். ‘Parking’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ராம் குமார் பாலகிருஷ்ணனுடன் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதும் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் கதைக்களம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியாகாத நிலையிலும் இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

குழந்தைகள் முதல் இளைஞர்கள், குடும்ப ரசிகர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் தனக்கென ஒரு வரவேற்பை உருவாக்கியுள்ள சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி கமர்ஷியல் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக தயாரிப்பாளர்கள் விரும்பும் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப்பிறகு வளர்ந்துள்ளார் . அந்தப் பயணத்தில் பாரம்பர்யமிக்க சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பும், புதிய தலைமுறை இயக்குநரின் இயக்கமும் இணையும் SK27 மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. “கமர்ஷியல் கிங் SK-வின் புதிய ரைடு” என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியிருக்கின்றது.



