சமூகநீதி விடுதிகளில் மாணாக்கர்களின் உணவு உள்ளிட்ட குறைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில், ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு சமூகநீதித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்கள், உணவு தொடர்பான புகார்கள் மற்றும் பிற குறைகளை உடனடியாகத் தெரிவித்து தீர்வு பெறும் வகையில் இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். மாணாக்கர்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளைத் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாகவும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மூலம் விடுதிகளில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
கட்டுப்பாட்டு அறை தொடக்க நிகழ்வின்போது, சமூகநீதித் துறை அமைச்சர் அவர்கள் மாணாக்கர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் நலன் குறித்து கேட்டறிந்தார். மாணாக்கர்களின் குறைகளை விரைவாகக் கண்டறிந்து தீர்வு காணும் வகையில் இந்த 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here