திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியதுக்குட்பட்ட கந்திலி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியே இல்லாமல் தேர்வானவர் பிரபு இவர் ஊராட்சிமன்ற தலைவர் பொறுப்பேற்ற பிறகு திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் இருந்து மலை அடிவாரம்வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் தார் சாலை போட்டதோடு மட்டுமல்லாமல் இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கி நீண்ட நெடுங்காலமாக வெகுஜன மக்களிடமிருந்து ஒதுங்கியிருந்த இருளர் இன மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். காசநோய் இல்லாத கிராமமாக தனது கிராமத்தை மாற்றியுள்ள பிரபு கொரோனா காலத்தில் தனது பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
தனது கிராம எல்லைக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் கிடைக்கும் அளவுக்கு குடிநீர் தொட்டிகட்டி பைப்லைன் மூலம் விநியோகம் செய்துவரும் பிரபுவுக்கு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டுக்களும் விருதுகளும் குவிந்துவருகிறது.
கலைஞர் வீடுகட்டும் திட்டம் மூலம் தனது கிராமத்தில் பலருக்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ள பிரபு போன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி, மதம், அரசியல் கடந்து போற்றுதலுக்குரியவர் என்பதில் ஐயமேதும் இல்லை தமிழகம் முழுவதும் உள்ள 12500க் கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களில் பிரபு போன்ற சமூக அக்கறையுள்ள தலைவர்கள் அடையாளம் காட்டப்படவேண்டும் SOUTHINDIAN VOICE இவர்களைப்போன்றவர்களை அடையாளம் காட்டுவதில் பெருமை கொள்கிறது.



