உலக சினிமாவில் அரை நூற்றாண்டைக் கடந்து சூப்பர் ஹீரோவாகவும், மாஸ் ஹீரோவாகவும் தொடர்ந்து வலம் வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மூன்று தலைமுறைகளைக் கடந்தும் தனது தனித்துவமான வசீகரத்தால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்றவர் என்பதை இந்தியத் திரையுலகில் தனி மனித ராஜாங்கம் நடத்திய ஜெயிலர் 2 திரைப்படம் மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளது. இவரது நடிப்பில், நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், சிம்ரன், நயன்தாரா, ராசி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தையும், ‘ஜூனியர் ரஜினி’ என்று அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே நேரத்தில் குரு, சிஷ்யன் இருவரின் படங்களையும் தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது இருவரது படங்களின் போஸ்டர்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஜினிக்குப் பிறகு மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும், ஜூனியர் ரஜினியாகவும் உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயனின் பட போஸ்டர், அவரது குருநாதரான ரஜினிகாந்தின் பட போஸ்டருடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. தலைமுறைகளைக் கடந்தும் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்தின் படத்திற்கு இணையாக, இன்றைய வசூல் சக்கரவர்த்தியும் ரஜினிக்கு அடுத்த மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவுமான சிவகார்த்திகேயனின் சேயோன் பட போஸ்டரும் வெளியாகியிருப்பது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குருவும் சிஷ்யனும் ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களை இணைந்து திருப்திபடுத்துவது சிவகார்த்திகேயன் தரப்பிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் #சிவகார்த்திகேயன் #கமல்ஹாசன் #ராஜ்கமல்பிலிம்ஸ் #தர்மன் #சேயோன் #தமிழ்சினிமா #அஸ்வத்மாரிமுத்து #Jailer2 #Rajinikanth #Sivakarthikeyan #KamalHaasan #RajkamalFilms

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here