எம்ஜிஆர், ரஜினிகாந்த் ஆகியோருக்குப் பிறகு மிகப்பெரிய கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்தை, எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் அடைந்தவர், தென்னிந்தியாவின் ஷாருக்கான் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறகு மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார். சமூக வலைத்தள மாஃபியாக்களுடன் இணைந்து செயல்படும் முன்னணி நடிகர்கள் என்ற வட்டத்திற்குள், ஊடகங்களால் புகழப்படும் ஹீரோக்களை விட சிவகார்த்திகேயனின் படங்களுக்கான வரவேற்பு மிகவும் அதிகம் என்ற உண்மை மறைக்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகிறார். ரஜினி முருகன் என்ற தனது படத்திற்குத் தலைவரின் பெயரைக் கொண்ட தலைப்பை விரும்பி ஏற்றுக்கொண்டு நடித்தவர். மிகப்பெரிய உயரத்தை அடைந்துவிட்டபோதும், இன்றும் என்னுடைய வழிகாட்டி, என்னுடைய தலைவர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றிப் பெருமையுடன் பேசி வருகிறார்.
தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் SK 27 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தொடக்ககால மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து, எவர்கிரீன் மாஸ் பாடலான ‘நான் பொல்லாதவன்’ பாடலை ரீமிக்ஸ் செய்வதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மிஷ்கின், நடிகை சரிதா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் நடிகர் சிவகார்த்திகேயனைச் சின்ன ரஜினி என்றுதான் அழைக்கின்றனர். ஏற்கெனவே ரஜினி ரசிகர் என்ற அடையாளத்துடன், சின்ன ரஜினி என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன், தனது புதிய படத்தில் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற ‘நான் பொல்லாதவன்’ பாடலை ரீமிக்ஸ் செய்வது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
#Sivakarthikeyan #SK27 #Rajinikanth #SuperstarRajinikanth #ChinnaRajini #NaanPolladhavan #Polladhavan #SivakarthikeyanFans #SKFans #SathyaJyothiFilms #TamilCinema #Kollywood #TamilCinemaNews #SouthIndianCinema #PeoplesHero



