கடந்த சில மாதங்களாக பத்திரிகைத் துறையில் AI-ஐ எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. Google News Initiative மற்றும் How India Lives இணைந்து நடத்திய Google AI Skills Program 2.0. இந்த திட்டமானது AI தொடர்பான புதிய தொழில் நுட்பங்களை கற்றறிய நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுடன், டெல்லியில் உள்ள Google தலைமையகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நேரடிப் பயிற்சியுடன் இந்தப் பயணம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற ஆன்லைன் அமர்வுகள் மூலம் நியூஸ்ரூம்களில் AI கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது, AI உதவியுடன் வீடியோக்களை உருவாக்குவது, எளிய Prompt-களிலிருந்து செயல்படும் செயலிகளை உருவாக்குவது எனப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, நானே இரண்டு செயலிகளை உருவாக்கினேன். ஒன்று காலநிலை மாற்றத்தையொட்டி carbon footprint real time tracker என்ற application ஐ ஒற்றை promptல் உருவாக்கினேன். மற்றொன்று தன்னாட்சி (Thanaatchi) காக பிரத்யேகமாக ஒரு வீடியோ Appஉருவாக்கினேன்.தன்னாடச்சியில் பதிவேற்றப்படும் அதிக நேரம் கொண்ட சுமார் 45 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களை Ai எப்படி single promptல் உருவாக்கித் தருகிறது என்ற ஆர்வத்தில் அதனை உருவாக்கினேன் . அதனை தற்போதிருப்பதை விட சிறப்பாகவே முழுமையான வடிவத்திற்குக் கொண்டு வந்த பிறகு வெளியிடும் திட்டம். AI மூலம் வீடியோ உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளிலும் இந்தப் பயிற்சி எனக்கு உதவியாக இருந்தது.

இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம், சுயாதீனப் பத்திரிகையாளர்களுக்கும் சிறிய செய்தி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தங்கள் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கியதுதான். ஏற்கெனவே Google Indian Languages Program மூலம் Mediaology Software நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும், DataLEADS உடன் பல்வேறு fact-checking திட்டங்களில் பங்கேற்ற அனுபவமும் எனக்கு உண்டு. அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, இந்த AI பயிற்சியும் How India Lives நிறுவனத்துடன் இணைந்து கற்றது பல புதிய கதவுகளைத் திறந்திருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் How India lives நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுப்பதோடு நின்றுவிடாமல், அதை நமது பணிகளில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் தொடர்ந்து வழிகாட்டினார்கள். இந்த வாய்ப்பை வழங்கிய Google News Initiative மற்றும் How India Lives குழுவினருக்கும், ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here