கடந்த சில மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் பதிவு, பெயர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் தரவுத்தள நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது
குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form 6-ல் பெற்றோர் அல்லது தாத்தா–பாட்டியின் பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததா என்ற கேள்வி சேர்க்கப்பட்டதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாற்றத்தை உரிய விதிமுறைத் திருத்தம் இல்லாமல் மேற்கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது


மேலும், வாக்காளர் தரவுத்தளத்தை டெல்லியில் மையப்படுத்துவது மற்றும் மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளின் அணுகல் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செயலாளரிடமும் அவர்கள் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
அதேவேளை, தேர்தல் ஆணையத் தரப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உள்ளிட்ட மூன்று ஆணையர்களின் ஒப்புதலுடனேயே அனைத்து முக்கிய முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் ஆணையத்தின் உள்நடவடிக்கைகள் தொடர்பாக தற்போது விவாதம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here