அறுவை சிகிச்சை இல்லாமல் புற்றுநோயை அழிக்கும் ‘எம்.ஆர்.ஐ கிரையோஅப்லேஷன்’ தொழில்நுட்பம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், அறுவை சிகிச்சை வெட்டுக்களே இல்லாமல் புற்றுநோயை அழிக்கக்கூடிய முன்னேற்றமான சிகிச்சை முறை ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எம்.ஆர்.ஐ கிரையோஅப்லேஷன் (MRI-guided cryoablation) எனப்படும் இந்த நவீன தொழில்நுட்பம், உலகின் மிக முன்னேற்றமான புற்றுநோய் சிகிச்சை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த சிகிச்சையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் நேரடி படங்களைக் கண்காணித்து, மிகச்சிறிய ஊசி போன்ற கருவி கட்டியின் உள்ளே செலுத்தப்படுகிறது. அதன் மூலம் கட்டி பகுதி மிகவும் குறைந்த வெப்பநிலைக்கு சுமார் 40°C அல்லது அதற்கும் குறைவாக குளிரூட்டப்படுகிறது.

இந்த கடுமையான குளிரால் புற்றுநோய் செல்கள் உடைந்து அழிகின்றன. இதனால், பெரிய அறுவை சிகிச்சை, தையல் அல்லது நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்குதல் போன்றவை தேவையில்லை.
இந்த முறை மிகவும் துல்லியமானதாக இருப்பதால், கட்டி இருக்கும் பகுதியை மட்டுமே அழித்து, அதைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களை பாதுகாக்க முடிகிறது. அறுவை சிகிச்சைக்கு உடல் சக்தி இல்லாதவர்கள், வயதானவர்கள் அல்லது ஆபத்தான இடங்களில் கட்டி இருப்பவர்கள் ஆகியோருக்கு இது ஒரு மாற்று வாய்ப்பாக கருதப்படுகிறது.
பல நோயாளிகள், சிகிச்சை நாளிலேயே மருத்துவமனைக்கு வந்து, எம்.ஆர்.ஐ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று, அதே நாளில் வீட்டிற்குத் திரும்புகின்றனர். வலி குறைவாகவும், வெளிப்புற காயம் இல்லாமலும் இருக்கும் இந்த சிகிச்சை, எதிர்கால புற்றுநோய் சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here