இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று, லண்டனின் Stratford and Bow தொகுதியின் புதிய எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமாகுமரன். இந்த வெற்றியின் மூலம், அவர் இங்கிலாந்து தேர்தல் வரலாற்றில் தேர்வான முதல் தமிழ் பெண் எம்.பி என்ற பெருமைமிக்க சாதனையைப் படைத்துள்ளார்.East London-ல் பிறந்து வளர்ந்த உமா, சிறுவயதிலிருந்தே சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, பெண்கள் உரிமைகள், சமத்துவம், மூலைக்குத் தள்ளப்படும் சமூகக் குழுக்கள் பற்றிய பிரச்சனைகளில் குரல் கொடுத்து வந்தவர். இவருடைய சமூகப் பணி, போராளி போன்று செயல்பட்ட விடயம், லேபர் கட்சி கவனத்தில் எட்டியது. முற்போக்கு சிந்தனையுடனும், மக்கள் நலனில் ஈடுபட்ட உறுதிச் செயற்பாடுகளாலும், மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றதின் விளைவாக 2025-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றியைத் தந்தது.உமா குமரன் லண்டன் மேயர் சாதிக்கானின் ஆலோசனைக் குழுவிலும் முன்னர் இடம் பெற்றிருந்தார். இப்போது, அவர் பாராளுமன்றத்தில் தமிழர் நலனுக்காக பேசக்கூடிய ஆளுமையாக உயர்ந்துள்ளார். இது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கும், பெண்கள் உரிமை பேசும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஒரு பெருமையான தருணம்.உலகில் முதல் நாகரிக சமூகமாக திகழும் நம் தமிழர் பண்பாட்டுக்கு, தாய்வழிச்சமூகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தும் வகையில், உமா குமரனின் தேர்வு வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.இது வெறும் ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. இது தமிழர் அரசியல் விழிப்புணர்வின் எழுச்சியும், பெண்ணுரிமை நம்பிக்கையின் வெற்றியும் ஆகும்.> SOUTH INDIAN VOICE இதழும் இணையமும், இவ்வுயர்ந்த தமிழச்சியின் பயணத்தில் துணையாக இருக்கிறோம்.பெருமைபெறும் தமிழர் பண்பாட்டுக்காக… மக்களுக்காக… உமாவுடன் நாமும்!