உலகத்தைச் சைக்கிளில் சுற்றி வந்து சாதனை படைத்ததுடன், பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, பல தங்கப் பதக்கங்களை வென்ற உலக சாதனையாளர் சவுந்தரராஜன், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யைச் சந்தித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் சமூக ஆர்வலராகவும் சௌந்தரராஜன் திகழ்ந்து வருகிறார். முன்னாள் காவல்துறை டிஜிபி வால்டர் தேவாரத்தின் மாணவரான இவர், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர். தனது சாதனைகள் மற்றும் சமூக நலப் பணிகளுக்காக இரு முன்னாள் முதலமைச்சர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரத்துடன் இணைந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்வேறு பணிகளில் திறம்படச் செயல்பட்ட அனுபவமும் இவருக்கு உண்டு. விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும், இளம் விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யை உலக சாதனையாளர் சௌந்தரராஜன் நேரில் சந்தித்திருப்பது விளையாட்டுத் துறையினர் மற்றும் இளம் விளையாட்டு சாதனையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சாதனைகளைப் படைத்த ஒருவரின் இந்தச் சந்திப்பு, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு மேலும் ஒரு உந்துதலாக அமைந்துள்ளது.

#உலகசாதனையாளர் #சவுந்தரராஜன் #முதலமைச்சர்விஜய் #தமிழகமுதலமைச்சர் #தமிழகவெற்றிக்கழகம் #சைக்கிள்சாதனை #உலகசுற்றுப்பயணம் #தங்கப்பதக்கங்கள் #சமூகஆர்வலர் #சமூகநலப்பணிகள் #வால்டர்தேவாரம் #விளையாட்டுமேம்பாடு #இளம்விளையாட்டுவீரர்கள் #தமிழ்நாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here