2026 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று நடிகர் விஜய் பெரும்பான்மை இல்லாத ஆட்சியை நடத்திக் கொண்டு வரும் நிலையில், திமுகவுடன் கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்ற சிறிய கட்சிகள் விஜயுடன் இணைந்து ஆட்சியிலும் கூட்டணியிலும் இணைந்து பயணிக்கின்றன. திமுக தனித்து விடப்பட்டது, இனி அவ்வளவுதான், கூட்டணியால் தான் திமுக வென்றது என்கிற கருத்துருவாக்கங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நிலையில், வெற்றி வாய்ப்பை இழந்த ஓரிரு வாரங்களிலேயே ஜென்சி மீட் என்று இளைஞர் பட்டாளம் தன்னெழுச்சியாகத் தமிழ்நாடு முழுவதும் திரண்டது அகில இந்திய அரசியலையே உற்று நோக்க வைத்தது.

சென்னை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை என்று தொடர்ந்து ஜென்சி இளைஞர்கள் தொடர் அரங்கக் கூட்டங்களையும் கருத்தரங்கங்களையும் நடத்தி, திராவிட இயக்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது, திமுக மற்ற கட்சிகளைப் போல் தனிநபர் கவர்ச்சியிலோ, சாதி, மதக் கட்டமைப்பிலோ வளர்கின்ற, வளர்ந்த கட்சி அல்ல. கலைஞர் அவர்களின் பாணியில் சொல்வது என்றால், இது ஒரு சமுதாயப் பேரியக்கம் என்கிற அளவில் அந்த இளைஞர்கள் கூட்டம் திரண்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கொள்கை சார்ந்த கட்சியின் அடித்தளம் மிகவும் வலுவாக இருப்பதையே பறைசாற்றியது.

கட்சியின் கட்டமைப்பையே மாற்ற கட்சித் தலைமை முடிவெடுத்து இருந்த நிலையில், மறு சீரமைப்பு குறித்த பணிகளும் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், தன்னெழுச்சியாக சமூக வலைத்தளங்களில் இந்த இளைஞர் படை கருத்தியல் விவாதங்களையும் எதிர்க் கேள்விகளையும் வைத்திருப்பது, இந்திய அளவில் இப்படி ஒரு கொள்கை சார்ந்த இயக்கம் அடுத்தடுத்த தலைமுறையைக் கடந்து நிற்குமா என்கிற மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கின்றது.

இளைஞர்கள் கூட்டம் மற்ற இயக்கங்களைப் போல், அரசியல் கட்சிகளைப் போல் பதில் லாவணி பாடுவதை விட, கொள்கை சார்ந்த பதில்களையும் ஏவுகணை போன்ற எதிர்க் கேள்விகளையும் வைப்பது தமிழக அரசியல் களமும் ஏன் இந்திய அரசியல் களமும் இதுவரை காணாத ஒன்று. திமுக என்கிற கட்சியின் மேல் அபிமானம் கொண்ட கொள்கைசார் இளைஞர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கின்றது. அதை அவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் இந்த இளைஞர்களை வழிநடத்துகின்றார்.

இந்த இளைஞர் கூட்டம் கேட்கின்ற கேள்விகளும் வைக்கின்ற விவாதங்களும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குக் கலக்கத்தையும் ஒருவித பயத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதே உளவியல் உண்மை. இன்னும் சொல்லப்போனால், அந்தக் கட்சியின் தலைமையாக இருக்கும் நடிகர் விஜய்க்கே தூக்கத்தைக் கெடுக்கும் அளவிற்கு எதிர் விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில் இந்த இளைஞர்கள் எழுப்பும் கேள்விகளும் இருக்கின்றது என்பதே உண்மை.

இந்த இளைஞர் கூட்டத்தை ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் சமாளிக்கலாம். ஒருவேளை தவெக ஆட்சி கவிழும் பட்சத்திலோ, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலோ, 2029 ஒரே நாடு ஒரே தேர்தலின் போது மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டால், இந்த இளைஞர்கள் கூட்டத்தை நிச்சயம் சமாளிக்கவே முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த உதயநிதியின் படை விஜயின் தூக்கத்தைக் கெடுத்திருப்பதை அவரது வட்டாரத் தகவல்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

#DMK #UdhayanidhiStalin #GenZ #GenZMeet #DravidianMovement #DravidianIdeology #TamilNaduPolitics #TVK #Vijay #PoliticalDebate #YouthPower #SocialJustice #TamilPolitics #SOUTHINDIANVOICE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here