மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் வாக்குக்கு பணம் வழங்கப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்ற கட்சிகளைவிட அதிக அளவில் பணம் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் முதல் கட்டமாகவும் இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தலுக்காக ₹400 கோடி வரை செலவு செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல்களை மறுக்க முடியாத அளவுக்கு தான் இருக்கின்றது. தொகுதிக்கு இரண்டு லட்சம் வாக்குகள் என்றாலும் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் என்றால் ஒரு தொகுதிக்கு 200 கோடி அடிப்படையில் இரண்டு தொகுதிக்கு 400 கோடி என்று தகவல்கள் உறுதியாக சொல்கின்றன. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் 400 கோடி செலவு செய்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.அப்படி ஒரு மிகப்பெரிய தொகை இதுவரை இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு இடைத்தேர்தலிலும் யாருமே செய்யாதது என்று பிரம்மிப்பாகப் பார்க்கப்படுகிறது. 1962 தேர்தலில் காமராஜரின் காஞ்சிபுரம் தொகுதியில் வாக்குக்கு ₹5 வழங்கப்பட்டதாக அண்ணா குற்றம்சாட்டியதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் எழுந்த வாக்குக்கு பணம் என்ற குற்றச்சாட்டு, இன்று விஜய் வரை கடைபிடிக்கப்படுகிறதா என்பது ஜனநாயகக் கேலிக்கூத்தாக பார்க்கப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.

வாக்காளர்களின் தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு எதிராக வந்தால் என்ன செய்வது? பணத்தால் தேர்தலை வெல்ல முடியும் என்ற அரசியல் கணக்கு, மக்களின் வாக்குக்கு முன்பு தோல்வியடையுமா?

இது வெறும் தேர்தல் வெற்றி–தோல்வி பற்றிய கேள்வி மட்டுமல்ல. பணம், அதிகாரம், ஆளுங்கட்சியின் நிர்வாக இயந்திரம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தியும் மக்களின் தீர்ப்பை மாற்ற முடியாத நிலை உருவாகிறதா? என்பதுதான் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலின் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

களத்தில் விஜய்யின் தவெக தனது வைப்புத் தொகையைப் பெறவே போராடும் நிலை இருப்பதாகச் சொல்லப்படுகிறநிலையில் 400 கோடி என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்…திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here