நேற்று தமிழ்நாடு அரசு சார்பில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனும் சிறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரபலங்கள் பங்கேற்பு
இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர்கள் குமாரசாமி தியாகராஜன், மிஷ்கின், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வு கருத்துகளையும், தமிழ்நாடு அரசின் சமூக நீதி திட்டங்களையும் அவர்கள் பாராட்டிப் பேசினர்.
சமூக வலைத்தளங்களில் தாக்கம்
இவர்கள் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய உரை, சமூக வலைத்தளங்களையே தாண்டி ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
இயக்குநர்கள் பேசிய கருத்துக்கள் இளைஞர்களால் கொண்டாடப்பட்டாலும், சிவகார்த்திகேயனின் உரை குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் ஆகியோருக்கு பிறகு பெண்களின் இயல்பான ஆதரவைப் பெறும் நடிகராக சிவகார்த்திகேயன் தன்னை நிலைநிறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் பரவிய காணொளி
நேற்று நடந்த நிகழ்ச்சியின் காணொளிகள் சமூக வலைத்தளங்களையும் மீறி, குடும்பப் பெண்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தவறாமல் இடம் பிடித்துள்ளன. இது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சினிமாவைத் தாண்டி, சாதாரண குடும்பங்கள் வரை சென்றடைந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.திராவிட ஜீவா




