தமிழ்நாடு அரசு சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா அரங்கில் சிவகார்த்திகேயன் பெயரை உச்சரித்த போது பள்ளி மாணவ மாணவியர்கள் அரங்கம் அதிர கையொலி எழுப்பியது ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் மனதில் இடம் பிடித்திருப்பதை உணர்த்தியது.
பொதுவான நிகழ்ச்சியிலோ சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலோ அல்லது வேறு நிகழ்ச்சியில கூட நடிகர்கள் கவனத்தை ஈர்ப்பது உண்டு ஆனால் இன்று நடந்த விழாவில் அவருக்கான மரியாதை என்பது திரைத் துறையில் சாதித்த நடிகர் என்பதையும் தாண்டி அவரின் நன் நடத்தைகளுக்கும் பொதுவெளியில் அவரின் எளிமைக்கும் கிடைத்த நற்சான்றுகளின் மதிப்பீடே யாகும். வழக்கமாக திரை நட்சத்திரங்களின் வரவேற்பின் போது எழும் ஒலிகளுக்கும் சிவகார்த்திகேயனின் பெயரை உச்சரிக்கும்போது எழுந்த மரியாதை மிகுந்த வரவேற்பும் திரை நட்சத்திரங்களுக்கு கிடைப்பதரிதே அந்த வரவேற்பினை திராவிட மாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் ரசித்தது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு சிறப்பு அம்சம் சிவகார்த்திகேயனின் கல்வித்தகுதியும் ஆகும் வருங்கால தலைமுறைக்கு படித்த பண்புள்ள இவரைப் போன்ற கலைஞர்கள் முன்மாதிரியாக திகழ்வது போற்றுதலுக்குரியது.. திராவிட ஜீவா




