ரஜினிகுப்பிறகு எந்தவித சினிமா,பொருளாதர மற்றும் சமூக பின்னணி இல்லாமல் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டவர் கமர்சியல்கிங் என்று அழைக்கப்படும் சின்ன ரஜினி சிவகார்த்திகேயன்.குறுகிய காலத்தில் இவர் அடைந்த உச்சம் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எண்பதுகளின் தொடர் வெற்றியை பிரதிபலிக்கிறது. சூப்பர் ஸ்டாரின் வெற்றிகள் இமாலய வெற்றிகள் இடைவிடாமல் தொடர்ந்து நடித்த அத்தனை படங்களும் வெற்றியடைந்தன.அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட கடந்த 40 வருடங்களில் சினிமாவில் போராடி வென்று தொடர் வசூல்வெற்றி நாயகனாக தடம் பதித்தது ரஜினிக்குப்பிறகு சிவகார்த்திகேயன் மட்டுமே என்பது ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட உண்மை.சினிமாவுக்கு வந்து வெகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை விட ஓபனிங் சாதனையை சத்தம் இல்லாமல் டாஉடைத்தவர் இந்த சரித்திர நாயகன்,தமிழ் சினிமாவில் நடக்கும் அரசியல் சதுரங்கத்தில் சிவகார்த்திகேயனின் சரித்திர வெற்றிகள் சத்தம் இல்லாமல் பெட்டிக்குள் பூட்டப்பட்டுவிட்டது. குறிப்பாக டாக்டர் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளுள் ஒன்று என்பதை சிவகார்த்திகேயன் தரப்புகூட கண்டு கொள்ளாமல் விட்டதுதான் பெரும் சோகம்,டாக்டர் படத்தை தொடர்ந்து வந்த டான்படம்தான் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு 100 கோடி வசூலித்த முதல் ஹீரோ என்கிற அந்தஸ்தை அதிகாரபூர்வமாக பெற்ற முதல் படமாகும்.இப்படி சத்தம் இல்லாமல் சரித்திர வெற்றிகளை படைத்தும் ஆன்லைன் மாஃபியா கும்பல்களால் குறிவைத்து அதிகம் தாக்கப்பட்ட ஹீரோ இவராகத்தான் இருக்க முடியும்.

எண்பதுகளில் ரஜினியை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எப்படி அமைதி காத்தார்களோ அப்படித்தான் இவருக்கும் நடந்தது இவரை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் வெளிப்படையாக சொல்லவே இல்லை இவர் ரஜினிக்குப்பிறகு நம்பர் ஒன் கமர்சியல் ஹீரோ என்பதை, விநியோகஸ்தர்கள் முதல் தியேட்டர் அதிபர்கள்வரை மௌனம் காத்ததும் இப்போதுவரை மர்மமாகவே இருக்கின்றது. இதற்கிடையில் தடுக்கவே முடியாத மறைக்கவே முடியாத ஆர்ப்பரித்த வெற்றியாக அமரன் அமைந்தது. முந்தைய தயாரிப்பாளர்களைப்போல் இல்லாமல் சோனி பிக்சர்ஸ்ம் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனமும் வெளிப்படையாக சரித்திர வெற்றி பதிவு செய்தது. சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அமரன் ஒரு மைல்கல் விழாவாக பதிந்தது.இப்படி மாபெரும் வெற்றிக்குப் பிறகு வரும் மதராசி படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்தவித பிரமோஷனும் இல்லாமலேயே மிகப்பெரிய முன்பதிவு சாதனையை படைத்துள்ளது சிவகார்த்திகேயன் என்கின்ற மக்கள் விரும்பும் நாயகனின் மகத்துவத்தையே காட்டுகின்றது. ஏ ஆர் முருகதாஸ் விஜயகாந்த்க்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ரமணா என்ற படத்தை கொடுத்தார். தொடர் சரிவிலிருந்த விஜய்க்கு துப்பாக்கி என்கின்ற படத்தின் மூலம் மறுவாழ்வு கொடுத்தார். சூர்யாவின் சினிமா கேரியரில் கஜினி என்கிற படத்தின் மூலம் வசூல் புரட்சி நடிகர்கள் பட்டியலில் இணைத்த பெருமையும் முருகதாசுக்கு உண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் இன்றளவும் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் படமாக கொண்டாடப்படுகின்றது.இப்படி தொடர் சரித்திர வெற்றிகளை படைத்த சிவகார்த்திகேயனும் முருகதாசும் இணைவது இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஆக்க்ஷன் காட்சிகளில் எண்பதுகளின் ரஜினியையும் விஜயகாந்தையும் நினைவுபடுத்தும் அளவிற்கு சிவகார்த்திகேயனின் சண்டைக்காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்த நிலையில் மதராசி படத்தில் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு சண்டைக் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்பதுகளில் ரஜினியும் 90களில் விஜயகாந்த்ம் சண்டைக் காட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அதற்குப் பிறகு விக்ரம் சூர்யா உள்ளிட்டவர்கள் ஓரளவுக்கு செய்தாலும் தொடர் வெற்றிகளை கொடுக்க முடியாத கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்து விட்டார்கள். தற்போது தொடர் வெற்றி பயணத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் சண்டை காட்சிகள் எண்பதுகளின் ரஜினியையும் விஜயகாந்த்தையும் மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது மதராசி மூலம் .. திராவிட ஜீவா