மூத்த ஊடகவியலாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், சிறந்த நெறியாளருமான கார்த்திகைசெல்வன் அவர்கள், கடலூர் மாவட்டம் காந்தி கலா நிலையநடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய தனது தந்தை பா. சபாநாயகம் அவர்களது கல்விப்பணி மற்றும் சமூகத் தொண்டு குறித்து பதிவிட்டுள்ளார்.மாணவர்களை வீடு தேடி சென்ற தந்தைஅவரது தந்தை, பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி, அவர்களின் வீடுகளுக்கே சென்று படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இப்பணிகள், இன்றைய சமூக வலைதள காலத்தில் நடந்திருந்தால், அவர் முற்போக்கு சிந்தனையாளராகப் புகழ்பெற்றிருப்பார்.அந்த காலகட்டங்களில் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், இத்தகைய செயல்களுக்கு இடமளிக்கவில்லை என்றாலும், அப்போதைய ஆசிரியர்களின் சமூக பணி, தமிழகத்தில் கம்யூனிச மற்றும் திராவிட சித்தாந்தங்களின் தாக்கத்தை வெளிப்படுத்தியது.அரசியல் மாற்றம் கொண்டுவந்த ஆசிரியர்கள்70, 80களில் ஆசிரியர் பணி, இடைநிலைச் சாதிகளின் கைகளுக்கு வந்தது மிகப்பெரிய அரசியல் மாற்றமாகும். இதன் விளைவாக, சமூகத்திற்கு பல நல்லாசிரியர்கள் கிடைத்தனர். இவர்களின் இடைவிடாத பணிகள்தான், இன்றைய கல்விப் புரட்சியின் விதைகள்.

அந்தகாலத்தில், கம்யூனிச மற்றும் திராவிட சிந்தனையுடன் பணியாற்றிய ஆசிரியர்களே, தமிழகத்தில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். குறிப்பாக தமிழ் ஆசிரியர்கள், காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்றோருக்கு இணையாகச் செயல்பட்டனர் என்பது மிகைப்படுத்தலல்ல.இடஒதுக்கீடு குறித்த கார்த்திகை செல்வனின் தெளிவான பார்வைஇப்படிப்பட்ட ஆகசிறந்த ஆசிரியரின் மகனாகப் பிறந்த கார்த்திகைசெல்வன், இடஒதுக்கீடு குறித்து வெளிப்படையான பார்வையைக் கொண்டிருந்தார். சமூக வலைதள காலத்துக்கு முன்னரே, ஒரு தனியார் தொலைக்காட்சியில் இடஒதுக்கீடு குறித்து அவர் பேசிய காணொளி, அறிவும் உணர்வும் கலந்த தெளிவான சிந்தனையை வெளிப்படுத்தியது.இந்தக் காணொளி, பலரால் மேற்கோள்காட்டப்பட்டு, இன்றளவும் சமூக வலைதளங்களில் பரவுகிறது.தந்தையின் புகழ் – மகனின் வழியாகதந்தை மகற்காற்று நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல் என்ற குறளின் பொருளுக்கேற்ப, வளர்த்த தந்தையால் “தந்தை மகற்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்” என்று வாழும் கார்த்திகைசெல்வனின் உயரத்தை காணாமல் சென்றிருப்பது துயரம் என்றாலும், அந்த மாமனிதரின் புகழ் பல கார்த்திகைசெல்வன்கள் வழியாக சமூகத்தை வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.— திராவிட ஜீவா



