தமிழக சுகாதாரத் துறையில் பெரிய அளவிலான நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு புதிய டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நீண்டநாட்களாக நிரப்பப்படாமல் இருந்த சுகாதாரத் துறையின் இயக்குநர் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன.தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (DPH) இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை (DMS) இயக்குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். மேலும், குடும்ப நலத்துறை இயக்குநர் பதவிக்கு இதுவரை முழு பொறுப்பில் யாரும் நியமிக்கப்படாமலேயே இருந்தது.இந்நிலையில், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்A. சோமசுந்தரம் – பொது சுகாதாரத் துறை இயக்குநராகவும்டி. கே. சித்ரா – மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநராக இருந்தவர் இயக்குநராகவும்சந்தியா – குடும்ப நலத் துறை இயக்குநராகவும்லோகநாயகி – மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலராகவும் நியமிக்கப் பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி உட்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவிகள் காலியாக இருந்தன. தீவிர பரிசீலனைகளுக்குப் பிறகு புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.டாக்டர் அரவிந்த் – ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக இருந்தவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டாக்டர் ஹரிஹரன் – திருவண்ணாமலை டீனாக இருந்தவர், ஓமந்தூரார் டீனாகவும்டாக்டர் கவிதா – சென்னை மருத்துவக் கல்லூரி – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை துணை டீனாக இருந்த இவர் கீழ்ப்பாக்கம் டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.டாக்டர் லியோ டேவிட் – கீழ்ப்பாக்கம் டீனாக இருந்தவர், கன்னியாகுமரி டீனாகவும்டாக்டர் கீதாஞ்சலி – கோவை மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.டாக்டர் பிரியா பசுபதி – செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய டீன்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார நிர்வாகத்தில் முன்னேற்றத்தை நோக்கி எடுக்கப்பட்ட முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது… திராவிட ஜீவா