வேளச்சேரியைச் சேர்ந்த மணிமாறன், திராவிட இயக்கக் கருத்தியல் சிந்தனையுடன் சீறிப்பாயும் இளைஞராக வைகோவை பின்தொடர்ந்து மதிமுக தொடங்கியதிலிருந்து பயணித்தவர். படிப்படியாக வளர்ந்து, மதிமுகவில் மாவட்டச் செயலாளராக உயர்ந்தார். அடிப்படையில் பில்டராக இருந்த அவர், கட்சியின் கொள்கை கூட்டங்களைத் தன் சொந்த செலவில் நடத்தி வந்தார்.பெரியார்–அண்ணா வழியில், திராவிட இயக்கக் கொள்கையுடனும், தமிழ் உணர்வுடனும் பயணித்த தலைநகரத் தளபதிகளில் முக்கியஸ்தராக வைகோவுக்கு தூணாக இருந்தவர். அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், அவரை அன்போடு “தலைநகரத்தளபதி” என்று அழைத்தனர். கொள்கைக்காகவும், கட்சிக்காகவும், தனது நேரம், பணம், உழைப்பு மூன்றையும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அர்ப்பணித்த சுயநலமற்ற கொள்கைவாதிதான் மணிமாறன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால், இப்படிப்பட்ட செயல்வீரர்களை அரசு அதிகாரப் பொறுப்பிற்கும் வரவிடாமல் செய்ததோடு, அவர்களின் சுயமரியாதையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வைகோ செயல்பட்டதால், தாய்க்கழகமான திமுகவில் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது.தென் சென்னையில் பல சீனியர்கள் திமுகவுக்கு உழைத்திருந்தாலும், கலைஞர் அவர்கள் சொன்னது போல், மதிமுகவிலிருந்து திமுகவிற்கு திரும்பியவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் திமுகவினராகவே கருதப்படுவார்கள் என்கிற அடிப்படையில் பார்க்கலாம். மதிமுகவிலேயே தனது உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த மணிமாறன், திமுகவில் முக்கிய பொறுப்பாளராகவோ, அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ ஆனால், அது கட்சிக்கும் நல்லது. கொள்கை சார்ந்து பயணிக்கும் மிகப்பெரிய அரசியல் இயக்கமான திமுகவுக்கும் நல்லது. மணிமாறன் போன்ற கொள்கை பிடிப்புடன் செயல்வீரர்கள் களத்தில் நிற்பது கூடுதல் பலமாக இருக்கும்.இது, ஒரு திராவிட இயக்க உணர்வாளரின் ஜனநாயகக் குரலாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் எழுதப்பட்ட சுயநலம் இல்லாத கட்டுரை..— திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here