மகேந்திரா அண்ட் மகேந்திரா குழுமம் தனது ஊழியர்களின் நலனுக்காக மிக முக்கியமான ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டும் வகையில், நிறுவனத்தால் ₹400 முதல் ₹500 கோடி வரை மதிப்புள்ள பங்குகள் வழங்கப்பட உள்ளன.இந்த புதிய முயற்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மகேந்திரா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) அணீஷ்ஷா, “நாங்கள் புதிய பணியாளர் பங்கு உரிமை திட்டம் (Employee Stock Ownership Plan – ESOP) ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இந்த திட்டம், ஆலைகளில் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.இத்திட்டம் தனிப்பட்ட ஒரு பிரிவுக்கே அல்லாது, மகேந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.“எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த பங்குகளை வழங்குகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், மொத்தம் 23,000 தொழிலாளர்கள் பங்குகளை பெறவுள்ளனர். இது மகேந்திரா குழுமத்தின் ஊழியர்களுடன் கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஒரு பொது வளர்ச்சி நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.இந்த முன்னோடியான முயற்சி,தனியார் நிறுவனங்களில் ஊழியர்களை வெறும் வேலைசெய்யும் நபர்களாக கருதாமல் நிறுவன வளர்ச்சியின் பங்குதாரர்களாக கருதும் புரட்சிகர எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மகேந்திராவின் இந்த நடவடிக்கை, ஊழியர் நலனை கவனம் செலுத்தும் கலாசாரத்திற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக அமையும்….திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here